– விளம்பரம் –
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது தொடைப்பகுதியில் காயமடைந்தார். பின்னர் அதற்கடுத்து மூன்று போட்டிகளை அவர் இந்த காயம் காரணமாக தவறவிட்டார். அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை அவர் தவற விட்டிருந்தார்.
ரோஹித் சர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட் :
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வேளையில் ரோகித் சர்மாவின் வருகை அவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
– விளம்பரம் –
இவ்வேளையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டுள்ள ரோகித் சர்மா தற்போது வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்படுவதாகவும், உடற்தகுதியிலும் நல்ல நிலையில் இருப்பதால் நாளை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் அவர் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வரும் ரோகித் சர்மா எந்த ஒரு அசவுகரித்தையும் சந்திக்காததால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை ரோகித் சர்மா நாளைய போட்டிக்கான மும்பை அணிக்கு மீண்டும் திரும்பினால் நிச்சயம் அது மும்பை அணிக்கு பலம் சேர்க்கும் ஒரு விடயமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு அடுத்து இரண்டாவது பவுலராக மாபெரும் சாதனை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் தொடரின் 41-ஆவது லீக் போட்டியானது ஏப்ரல் 29-ஆம் தேதியான நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்