“அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை” – சென்னை உயர் நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் நேரு மீது நேரடி வழக்குப்பதிவு உத்தரவு இல்லை, நியமன முறைகேடு வழக்கில் விசாரணை கோடை விடுமுறைக்கு பின் ஜூன் நான்காம் வாரத்துக்கு தள்ளி வைப்பு

கே.என்.நேரு
கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில், 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக, இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல, அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசும், அமைச்சர் நேரு தரப்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நேரு தரப்பில், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் முன் தனது தரப்பில் வாதங்களை முன் வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்க வேண்டும் என்பதால், விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

Thank You

Related Posts

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர எதிரான வழக்கு : தமிழக அரசு மேல் முறையீடு  – Kumudam

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து…

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

தமிழகம் முழுவதும் சுமார் 1,689-க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.சென்னை மண்டலம்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 470-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம்:…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ரோஹித் சர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. எப்போது கம்பேக்?

  • By admin
  • April 28, 2026
  • 2 views
ரோஹித் சர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. எப்போது கம்பேக்?

“அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை” – சென்னை உயர் நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 5 views
“அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை” – சென்னை உயர் நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மேயாத மான் படத்தில் ஹீரோ – ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

  • By admin
  • April 28, 2026
  • 10 views
மேயாத மான் படத்தில் ஹீரோ – ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர எதிரான வழக்கு : தமிழக அரசு மேல் முறையீடு  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 7 views
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர எதிரான வழக்கு : தமிழக அரசு மேல் முறையீடு  – Kumudam

Nadhiye Nadhiye Video Song | Rhythm Tamil Movie Songs |Arjun|A. R. Rahman|Pyramid Music – Ahatamil

  • By admin
  • April 28, 2026
  • 8 views
Nadhiye Nadhiye Video Song | Rhythm Tamil Movie Songs |Arjun|A. R. Rahman|Pyramid Music – Ahatamil

“உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா” அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகமன் படம் பார்த்த இளைஞர் கைது – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 4 views
“உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா” அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகமன் படம் பார்த்த இளைஞர் கைது – Kumudam
.site-info { display: none; }