இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த மண்டை ஒடு, எலும்பு கூடு, விபூதி: போலீஸ் தீவிர விசாரணை  – Kumudam

சென்னை வியாசர்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ருதி (29). இவர் சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் உள்ள தனியார் டூல்ஸ் விற்பனை செய்யும் கடையில் கடந்த 14 ஆண்டுகளாக அக்கவுண்ட்டாக வேலை பார்த்து வருகிறார்..

இந்நிலையில் நேற்று மாலை ஸ்ருதி வேலை பார்த்து வரும் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு பணியில் இருந்த காவலாளி கிருஷ்ணா லால்(59) என்பவரிடம் ஸ்ருதி பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளதாக கூறி பார்சலை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் காவலாளி கிருஷ்ணா லால் கடையில் இருந்த ஸ்ருதியை அழைத்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது என கூறிய போது ஸ்ருதி அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, பார்சல் என்னுடையது இல்லை என தெரிவித்துள்ளார்.. உடனே காவலாளி கிருஷ்ணா கடை உரிமையாளர் ஜித்தேந்தருக்கு தகவல் தெரிவித்து விட்டு அனைவரின் முன்பு பார்சலை பிரித்து பார்த்த போது அதில் பழமையான மனித மண்டை ஓடு ஒன்றும், 3 எலும்பு மற்றும் விபூதி பொட்டலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

உடனே காவலாளி கிருஷ்ணா இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் எஸ்பிளனேடு போலீஸார் அங்கு விரைந்து சென்று மண்டை ஓடு எலும்பு துண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

முதற்கட்ட விசாரணையில் ஸ்ருதியின் கணவர் தினேஷ் குமார் மெடிக்கல் சர்ஜிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.. மேலும் பார்சலை கொடுத்து சென்ற நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thank You

Related Posts

அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – Kumudam

நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும்…

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

அறிமுகம் டிஜிட்டல் மாற்றம் நாம் வாழும் மற்றும் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியமைக்கும் சகாப்தத்தில், கர்நாடகாஒன் இந்தியாவில் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாக வெளிப்படுகிறது. பல அரசு சேவைகளை ஒரே டிஜிட்டல் தளமாக ஒருங்கிணைப்பதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

  • By admin
  • April 26, 2026
  • 9 views
சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே: 2 – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 3 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே: 2 – Kumudam

Nethu Lyrics |Nethu Video | தனுஷ் | சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்பராஜ் – அகதமிழ்

  • By admin
  • April 26, 2026
  • 6 views
Nethu Lyrics |Nethu Video | தனுஷ் | சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்பராஜ் – அகதமிழ்

அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 11 views
அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – Kumudam

எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

  • By admin
  • April 26, 2026
  • 10 views
எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 26, 2026
  • 9 views
விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }