மனைவியை விவகாரத்து செய்த பிரபல இந்திய சுழற்பந்து வீச்சாளர்  – Kumudam

இந்திய அணிக்காக, ராகுல் சஹார்  6 டி20 போட்டிகளிலும் 1 ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாட, கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மார்ச் 9, 2022 அன்று கோவாவில் ராகுல் சஹார் இஷானியைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 22. இந்த நிலையில் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானியிடமிருந்து பிரிந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ராகுல் சஹார் தனது மனைவி இஷானியை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ”நான் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். என்னைப் பற்றியோ, எனது தகுதி குறித்தோ அல்லது எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியோ முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இது நடந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் நான் சற்றும் எதிர்பாராத பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தன.

கடந்த 15 மாதங்களாக நீதிமன்றங்களில் அலைந்தது எனக்குப் பொறுமையையும், மன உறுதியையும் கற்றுக் கொடுத்துள்ளது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று எனது வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை. மிகவும் தெளிவாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என வருத்தத்துடன்  பதிவிட்டுள்ளார்.

Thank You

Related Posts

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

அறிமுகம் டிஜிட்டல் மாற்றம் நாம் வாழும் மற்றும் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியமைக்கும் சகாப்தத்தில், கர்நாடகாஒன் இந்தியாவில் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாக வெளிப்படுகிறது. பல அரசு சேவைகளை ஒரே டிஜிட்டல் தளமாக ஒருங்கிணைப்பதன்…

வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கை இருங்க  – அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ் – Kumudam

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க.வினர், எப்படி புறவாசல் வழியாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

  • By admin
  • April 26, 2026
  • 9 views
எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 26, 2026
  • 8 views
விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

  • By admin
  • April 26, 2026
  • 8 views
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

  • By admin
  • April 26, 2026
  • 11 views
மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 11 views
கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்
.site-info { display: none; }