பிரதமர் மோடியின் அடுத்தடுத்த தமிழ்நாடு வருகையின் பின்னணி என்ன..? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

அரியனை கைப்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம்; மதுராந்தகம், மதுரை, திருப்பரங்குன்றம் நிகழ்வுகள், பிரதமர் மோடி, பியூஷ் கோயல், திருமாவளவன், கனிமொழி கருத்துகள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரியனையை கைப்பற்ற அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மும்முரமாக பணியாற்றி வருகிறது. இக்கூட்டணியின் முதல் பரப்புரைக் கூட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ஒருமாத இடைவெளியில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. கடந்த முறை பொதுக்கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு சென்ற பிரதமர், இம்முறை கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் முடிந்து, என்.டி.ஏ. தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, நாளை திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி, முருகனை தரிசனம் செய்கிறார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட மதுரை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றார். மறுபுறம், திருப்பரங்குன்றம் ஒருபோதும் அயோத்தியாக மாறாது என்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

இதனிடையே, என்.டி.ஏ. பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியார் புகைப்படம் அகற்றப்பட்டது சர்ச்சையான நிலையில், பெரியாரை மறுக்கக் கூடியவர்கள் தமிழ்நாட்டிலும் மறுக்கப்படுவார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.



Thank You

Related Posts

தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த அவர் தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்…

TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 9:47 PM IST 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

  • By admin
  • April 23, 2026
  • 6 views
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
.site-info { display: none; }