மதுரையில் பிரதமர் மோடி கூட்டம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட பெரியார் படம் அகற்றம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பிரதமருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுக்கின்றனர்.

செய்தி18
செய்தி18

மதுரையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தின் நுழைவு வாயிலில் இடம்பெற்றிருந்த பெரியார் படம் அகற்றப்பட்டது.

மதுரை மண்டேலாநகரில் நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டை வடிவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். அண்ணா படங்களுடன் பெரியார் படமும் இடம்பெற்றிருந்தது. பாஜகவினர் தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெரியாரின் படம் இடம்பெற்றது கவனம் பெற்றது. இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு நுழைவு வாயிலில் இருந்த பெரியாரின் படம் அகற்றப்பட்டது.

இதற்கிடையே, மதுரை வரும் பிரதமர் மோடி நாளை மாலை 4 மணி அளவில் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். மாலை 4 மணி முதல் 4.20 மணிவரை சாமி தரிசனம் முடித்துவிட்டு பொதுக்கூட்ட நிகழ்வுக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பிரதமருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுக்கின்றனர்.

தொடர்ந்து ராஜகோபுர பாதை வழியாக திருவாச்சி மண்டபம், கம்பத்தடி மண்டபம் சென்று மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்கிறார். சாமி தரிசனத்திற்கு பின்னர் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கோவிலுக்குள் நடந்து செல்வதற்கு ஏதுவாக ராஜகோபுரத்தின் கீழ் உள்ள படிக்கட்டுகளில் நடைமேடை அமைக்கப்படுகிறது. இதே போல கம்பத்தடி மண்டபத்திலும் பிரதமர் செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருவறைக்கு செல்வதற்கும் உயரமான படிக்கட்டுகளை எளிதாக கடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வாசலில் இருந்து கருவறை வரை 150 மீட்டர் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ள கருவறை முழுவதும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படுகிறது. சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் பிரதமருக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள அலுவலக அறை முன்பு வைக்கப்பட்டுள்ள சிம்மாசனத்தில் பிரதமர் மோடி அமர வைக்கப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

பிரதமர் வருகையை யொட்டி பக்தர்களுக்கு எந்தவித தடையும் இல்லை எனவும் வழக்கம்போல் நாளை காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்படும். அதுவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் மாலை பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்த பின்பு 5 மணி அளவில் வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Thank You

Related Posts

அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

எனவே, இந்திரா காந்தி தலைமையிலான அரசு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதன் கீழ், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2001 வரை மாற்றக் கூடாது என்ற திருத்தத்தை அரசியலமைப்பில்…

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “24-11-25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25 இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

  • By admin
  • April 17, 2026
  • 10 views
ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 17, 2026
  • 9 views
அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 6 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 6 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 10 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam
.site-info { display: none; }