அவுட், அவுட்… ஆர்ப்பரித்த சாக்ஷி; ‘விக்கெட்லாம் இல்ல’ என மனைவியை சாந்தப்படுத்திய தோனி


10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள், 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள், அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதிபெற்றன. அதன்படி, 4 பிரிவுகளில் இருந்து நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

இந்த 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதின. குரூப் 1-ல் இருந்து தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளும், குரூப் 2-வில் இருந்து இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற முதல் அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதின. மிகவும்  பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஜோடியில், 2 பவுண்டரியை மட்டும் விரட்டிய அபிஷேக் சர்மா 9 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த இஷான் கிஷன் 39 ரன்னில் அவுட் ஆனார்.

களத்தில் அதிரடியாக ஆடி வந்த சஞ்சு 27 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு 89 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த வந்த கேப்டன் சூரியகுமார் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 11 ரன்னில் அவுட் ஆனார். இதேபோல்,  4 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய துபே 43 ரன்னில் ரன் -அவுட் ஆனார். 3 சிக்ஸரை விளாசிய திலக் வர்மா 21 ரன்னுக்கும், 2 சிக்ஸர், 3 பவுண்டரியையும் விரட்டிய ஹர்திக் பாண்டியா 27 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

அக்சர் 2 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு இந்தியா 253 ரன்களை எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 254 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பவுலிங் வீசிய இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட்டையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து, 254 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் – ஜோஸ் பட்லர் தொடக்க ஜோடியாக களம் புகுந்தனர். இதில் அதிரடி காட்ட முயன்ற பிலிப் சால்ட் 5 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ஹாரி புரூக் அக்சர் படேலின் அற்புதமான கேட்ச் மூலம் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸர், 4 பவுண்டரியை விரட்டி பட்லர் 25 ரன்னுடன் நடையைக் கட்டினார். இதன்பிறகு களத்தில் இணைந்த ஜேக்கப் பெத்தேல் – டாம் பான்டன் ஜோடியில், டாம் பான்டன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இப்படியாக விக்கெட் சரிவை சந்தித்த இங்கிலாந்து அணியை, சரிவில் இருந்து மீட்டு இந்தியாவுக்கு இணையாக ரன்களை குவிக்க அடுத்த இணைந்த ஜேக்கப் பெத்தேல் – வில் ஜாக்ஸ் ஜோடி உதவியது. இதில் 20 பந்துகளில் ஜேக்கப் பெத்தேல் அரைசதம் விளாசி அசத்தினார்.

இந்த ஜோடி 7 ஓவர்களுக்கு மேல் தாக்குப் பிடித்து விறுவிறுப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடியை உடைத்து அசத்தினார் அர்ஷ்தீப் சிங். 13 ஓவரின் கடைசி பந்தில் 3 ஒயிடு வீசிய அர்ஷ்தீப் சிங், தனது 4-வது முயற்சியில் வீசிய பந்தை ஜாக்ஸ் எதிர்கொண்டார். அவர் டீப் பாயிண்டில் பந்தை விளாச அங்கிருந்த அக்சர் கேட்சை எடுத்து பவுண்டரி லைனில் குதித்தார். அதற்கு முன் அருகே இருந்த துபே-விடம் பந்தை தூக்கிப் போட்டு ஜாக்ஸ் விக்கெட்டை கழற்றினர். 4 பவுண்டரி, 2 சிக்ஸரை விளாசி அதிரடி காட்டி வந்த ஜாக்ஸ் 35 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அக்சரின் அருமையான முயற்சியை அனைவரும் பாராட்டினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், தனது முயற்சியை கைவிடாத ஜேக்கப் பெத்தேல், 45 பந்துகளில் சதம் விளாசி ஆச்சரியப்படுத்தினார். அவர் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தி வந்தார் துபே. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையில் 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தி இருக்கிறது. 4 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஒரே அணி என்கிற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுகிழமை இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் அரங்கேறுகிறது. இதில் இந்தியா நியூசிலாந்து அணியுடன் மல்லுக்கட்ட உள்ளது.

மனைவியை சாந்தப்படுத்திய தோனி

இந்நிலையில், இந்தப் போட்டியின் 18-வது ஓவரை பும்ரா வீசினார். அந்தக் கட்டத்தில் வெற்றி இலக்கை நெருங்க இங்கிலாந்து கடுமையாக முயற்சித்த சூழலில், இந்தியாவுக்கு விக்கெட் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பும்ரா வீசிய பந்து சாம் கரனின் பேட்டில் பட்டு அவரை நோக்கி வந்தது. பிட்ச் ஆகி மேலே எழுந்த பந்தை அவர் லாவகமாக பிடித்து இருந்தார்.

ஆனால், வி.ஐ.பி பாக்சில் இருந்த தோனியின் மனைவி சாக்ஷிக்கு பந்து பிட்ச் ஆனது தெரியவில்லை. பும்ரா பந்தை லாவகமாக கேட்ச் எடுத்ததாக நினைத்து அவுட், அவுட் என உற்சாகமாகி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்குப் பின்னால் இருந்த தோனி ‘அது அவுட் இல்லை; பந்து ஏற்கனவே பிட்ச் ஆகி விட்டது’ என்பது போல் சொல்லி அவரை சமாதானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.





Thank You

Related Posts

ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?

வெங்கட கிருஷ்ண பி 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30…

சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

IPL 2026 RCB vs GT லைவ் கிரிக்கெட் ஸ்கோர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் ஹைலைட்ஸ்: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

  • By admin
  • April 26, 2026
  • 7 views
எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 26, 2026
  • 7 views
விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

  • By admin
  • April 26, 2026
  • 8 views
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

  • By admin
  • April 26, 2026
  • 11 views
மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 11 views
கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்
.site-info { display: none; }