உங்க துணை முதல்வர் நடித்த கேரக்டரே நான் தான்! – உதயநிதியை சீண்டிய தவெக வேட்பாளர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் (மாமன்னன்) நடித்திருப்பார். அந்தப் படத்தில் வரும் சபாநாயகரின் மகன் கதாபாத்திரம் தான் நான்

ராசிபுரம் தவெக வேட்பாளர்
ராசிபுரம் தவெக வேட்பாளர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வன் அறிமுகக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. இவர் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபால் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிமுகப்படுத்தப்பட்டார். 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய லோகேஷ் தமிழ்செல்வன் தனது தந்தை பி. தனபால் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தபோது ராசிபுரம் தொகுதிக்குச் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். “போதமலை சாலை, பாதாள சாக்கடை, பைபாஸ் சாலை என இந்தத் தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிரைவேற்றி தந்தவர் தன்தந்தை தான் என்றும் கூறினார்.

மேலும், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் (மாமன்னன்) நடித்திருப்பார். அந்தப் படத்தில் வரும் சபாநாயகரின் மகன் கதாபாத்திரம் தான் நான். திரையில் அவர் நடித்தார், ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு சபாநாயகரின் மகனாக, அந்த ‘மாமன்னன் மகனாக’ நான் உங்கள் முன் நிற்கிறேன். கொஞ்சம் பார்த்துப் பேசுங்க” என்று உதயநிதியை நேரடியாகச் சீண்டியது வகையில் பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போதைய திமுக எம்எல்ஏ மருத்துவர் மா. மதிவேந்தன் மீது அதிருப்தி நிலவுவதாகவும், கஞ்சா புழக்கம் மற்றும் 24 மணி நேர டாஸ்மாக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தவெக-வின் இலக்கு என்றும் தெரிவித்தார். அடுத்த 15 நாட்களில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவோம் என்றும் இந்த முறை தமிழ்நாட்டின் வண்ணமே மாறும்” என உறுதியளித்தார்.



Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்
.site-info { display: none; }