– விளம்பரம் –
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள வேளையில் இந்திய அணியின் வீரர்களும் மைதானத்திலேயே தங்களது மகிழ்ச்சியினை கொண்டாட்டமாக கொண்டாடியிருந்தனர்.
ஒன்றரை ஆண்டுகள் உழைப்பிற்கு கிடைத்த பரிசு : திலக் வர்மா
மேலும் போட்டி நடைபெற்ற முடிந்த பின்னர் இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மாவும் இந்த வெற்றி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே சொல்ல வேண்டுமெனில் இந்த வெற்றிக்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளோம்.
– விளம்பரம் –
அதிலும் குறிப்பாக எங்களது அணியில் இடம் பெற்றுள்ள பேட்ஸ்மேன்கள் அனைவரும் எந்த ஒரு பேட்டிங் ஆர்டரிலும் விளையாடும் அளவிற்கு தயாராக இருந்தோம். எந்த பொசிஷனில் பேட்டிங் செய்ய களம் இறங்கினாலும் அந்த இடத்தில் விளையாடும் அளவிற்கு முறைப்படி தயாராக இருந்ததாலேயே இம்முறை பேட்டிங் ஆர்டரில் பல்வேறு மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. ஆனாலும் பேட்டிங் ஆர்டர் மாற்றம் நிகழ்ந்தும் எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
நாங்கள் ஏற்கனவே அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரை மாற்றி பரிசோதித்து பயிற்சி எடுத்ததால் இந்த தொடரில் அது நல்ல முடிவாக அமைந்தது. அதேபோன்று பீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் நாங்கள் நல்ல கேட்ச்களை இந்த தொடர் முழுவதுமே பிடித்துள்ளோம். அக்சர் பட்டேல் அரையிறுதி போட்டியிலும் சரி, இறுதி போட்டியிலும் சரி சிறப்பாக பீல்டிங் செய்தார். அதுபோன்று இஷான் கிஷனும் சிறப்பாக பீல்டிங் செய்திருந்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அணியின் நலனுக்காக எதையும் செய்ய தயார்.. எனக்கு தேவை எல்லாம் இது ஒன்று தான் – அக்சர் பட்டேல் நெகிழ்ச்சி
எங்களுடைய பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை என்றாலும் போதுமான அளவிற்கு சிறப்பாக உள்ளதாக நினைக்கிறேன். அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் இந்த வெற்றியை பெரிதாக கொண்டாட இருக்கிறோம். ஏற்கனவே இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் போது வெற்றி பெற்ற பின்னர் இரண்டு நாட்கள் கொண்டாட்டம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அந்த வகையில் அடுத்த இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விட்டு அதன்பிறகு ஐபிஎல் தொடருக்காக தயாராக இருக்கிறோம் என திலக்வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்