இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் சாம்பியன் பட்டம் யாருக்கு?





IND vs NZ மழை


– விளம்பரம் –

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை தொடருக்கான மாபெரும் இறுதி போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மழையால் இறுதிப்போட்டி ரத்தானால் சாம்பியன் யார்? :

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் யாருக்கு சாம்பியன் பட்டம் செல்லும்? என்பது குறித்து ஐசிசி கூறும் விதிமுறைகளை இந்த தொகுப்பில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கூறும் ரூல்ஸ் யாதெனில் :

– விளம்பரம் –

இந்த டி20 உலக கோப்பை தொடரானது மார்ச் 8-ஆம் தேதியான இன்று நடைபெறாமல் போனால் நாளை மார்ச் 9-ஆம் தேதி ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இன்று மழை காரணமாக போட்டி முழுமையாக நடத்த முடியவில்லை என்றால் மட்டுமே நாளை அந்த போட்டி தொடர்ந்து நடைபெறும். அதேபோன்று மழையால் எந்த இடத்தில் போட்டி தடைப்பட்டதோ அங்கிருந்து தான் மறுநாள் போட்டி துவங்கும்.

அதைத்தவிர முதலில் இருந்து ஆட்டம் தொடங்காது. அதேபோன்று ரிசர்வ் டே நாள் அன்று குறைந்தது 10 ஓவர்கள் இரு அணிகளும் விளையாடினால் மட்டுமே முடிவு உறுதி செய்யப்படும். ஒருவேளை இன்றும் மழையால் போட்டி ரத்தாகி நாளையும் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுமே சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் அசத்தப்போகும் 2 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – சீக்கா ஸ்ரீகாந்த் பேச்சு

ஆனால் அகமதாபாத் நகரின் வானிலை அறிக்கை வெளியானதில் : இன்று போட்டி நடைபெறும் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளதால் இன்றைய போட்டி முழுமையாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 5 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 4 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam
.site-info { display: none; }