கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தவெக தலைவர் விஜய் 200க்கும் மேல் இடங்கள் வெல்வார் என்ற செங்கோட்டையன் கூற்றை கனவு, ஓவரான சத்தம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில், மழனி கோயிலில் சாமி தரிசனம் செய்த அக்கட்சி நிர்வாகியும், கோபிசெட்டிபாளையம் வேட்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; ““நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் (விஜய்) திருச்செந்தூருக்கு சென்று முருகனை வழிபட்டு சென்றிருக்கிறார். இது ஒரு சிறந்த நாள். அவருடைய தொலைநோக்கு சிந்தனை, நாளை தமிழகத்தை ஆளுவது, மக்களால் ஒரு மனதாக அவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணங்களாக இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை உலகளவில் முதலில் பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி, சமூகப் புரட்சி தான் நடந்திருக்கிறது. ஆனால் வரும் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெறும்” எனத் தெரிவித்திருந்தார்.
200-ஐ தாண்டி விசில் போகும் என்பதெல்லாம் ஓவரான சத்தம்; விசிலுக்குனு ஒரு சத்தம் இருக்கு அதை தாண்டி சத்தம் வராது;
பாம் சத்தம், வெடி சத்தம் மாதிரி சொல்றாரு – 200 தொகுதிகளை விசில் தாண்டும் என செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் #செங்கோட்டையன் #டிவிகே… pic.twitter.com/CkGKWemH85— நியூஸ்18 தமிழ்நாடு (@News18TamilNadu) ஏப்ரல் 28, 2026
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவரும், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “200-ஐ தாண்டி விசில் போகும் என்பதெல்லாம் ஓவரான சத்தம். விசிலுக்குனு ஒரு சத்தம் இருக்கு அதை தாண்டி சத்தம் வராது. பாம் சத்தம், வெடி சத்தம் மாதிரி சொல்கிறார். கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. மிஞ்சிப்போனால், 4ஆம் தேதி வரை கனவு காண்பார்கள் அவ்வளவுதானே. இன்று அவர் ஆன்மீக தேடலுக்கு போகிறார். அதன்பிறகு ஷூட்டிங்கிற்கு இடம் தேட போவாரா எனும் சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 28, 2026 10:13 PM IST