– விளம்பரம் –
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறன்றன. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தற்போது அவர்களது சொந்த மைதானத்தில் வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த யுவ்ராஜ் சிங் இவர்தான் : சுப்ரமணியம் பத்ரிநாத்
இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் சார்ந்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சி.எஸ்.கே வீரருமான சுப்பிரமணியம் பத்ரிநாத் அடுத்த யுவ்ராஜ் சிங் யார் என்பது குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
– விளம்பரம் –
அந்தவகையில் அவர் கூறியதாவது : எனக்கு வைபவ் சூர்யவன்ஷியை பார்க்கும் போது இளம்வயது யுவ்ராஜ் சிங்கை பார்ப்பது போல் இருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷியின் திறமை மிகச்சிறப்பாக இருக்கிறது. அதைத்தவிர்த்து இந்த இளம் வயதிலேயே அவர் அடிக்கும் சிக்ஸர்கள் மிகப்பெரிய சிக்ஸர்களாக இருக்கிறது. அந்த சிக்ஸர்கள் தான் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
19 வயதுக்கு உட்பட்டோர் போட்டிகளிலேயே யுவ்ராஜ் சிங் அடிக்கும் சிக்ஸர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று விழும். அதே அளவு சக்தி தற்போது வைபவ் சூர்யவன்ஷியிடமும் இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த சீசன் மிகவும் ஒரு முக்கியமான சீசனாக அமையப்போகிறது. அவருடைய முதல் சீசனிலேயே அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். அதனால் இம்முறை பவுலர்கள் அவருக்கு எதிராக சரியான திட்டங்களுடன் வருவார்கள் என்று கருதுவதாகவும் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : எனக்கு அந்த தொடர் வரை பதவி நீட்டிப்பு தாங்க.. பி.சி.சி.ஐ-யிடம் முறையிட்ட அஜித் அகார்கர் – விவரம் இதோ
ஏற்கனவே இந்திய டி20 அணியின் இளம் துவக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மாவின் பேட் ஸ்விங் யுவ்ராஜ் சிங் போலவே இருப்பதாகவும் அவர் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கக்கூடிய வீரராகவும் இருப்பதால் அவரே அடுத்த யுவ்ராஜ் சிங் என்று பலரும் பேசிவரும் வேளையில் சுப்ரமணியம் பத்ரிநாத் அடுத்த யுவ்ராஜ் சிங் வைபவ் சூர்யவன்ஷி தான் என்று கூறியுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விளம்பரம்