– விளம்பரம் –
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 சீசனானது இந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி துவங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு :
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரானது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் இந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக ஒரு சில வீரர்கள் காயம் காரணமாகவும், ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட காரணமாகவும் இந்த தொடரில் இருந்து விலகி வருகின்றனர்.
– விளம்பரம் –
அந்த வகையில் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது டெல்லி அணியில் இடம்பெற்று விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தங்களது அணியின் முக்கிய வீரர்களின் பணிச்சுமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 12 மாதங்கள் ஆஸ்திரேலிய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதினால் ஸ்டார்க் போன்ற வீரர்களுக்கு போதுமான ஓய்வை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் ஸ்டார்க் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா இல்லை.. கண்டிப்பா இந்த பையன் தான் அடுத்த யுவ்ராஜ் சிங் – பத்ரிநாத் கணிப்பு
கடந்த மெகா ஏலத்தின் போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் 11.75 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அவர் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டியில் விளையாடாத வேளையில் அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்