கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

பிபிகேஎஸ் எதிராக டிசி

– விளம்பரம் –

இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 35 ஆவது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அந்தவகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய வரலாற்று சாதனை :

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 152 ரன்களையும், நிதீஷ் ராணா 91 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

– விளம்பரம் –

அந்த மாபெரும் இலக்கினை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது போட்டியின் முதல் பந்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 19 ஓவர்களின் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 265 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 76 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 71 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச சேசிங்காக ஏற்கனவே பஞ்சாப் அணி 262 ரன்களை துரதியிருந்த வேளையில் இன்றைய போட்டியில் 265 ரன்களை சேசிங் சேசிங் செய்து ஐ.பி.எல் வரலாற்றை மிகப்பெரிய சேசிங் வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்தது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 6 ஆவது வெற்றியை பதிவுசெய்து புள்ளி போட்டிகளில் முதலிடத்தில் நீடிக்கிறது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : திருப்பி அடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. பவர்பிளே ஓவர்களில் இரண்டாவது அணியாக நிகழ்த்திய – அசத்தல் சாதனை

ஏற்கனவே இந்த தொடரில் மிகபலம் வாய்ந்த அணியாக அசைக்க முடியாத அளவில் சிறப்பாக விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்றைய போட்டியிலும் 265 ரன்கள் என்கிற இமாலய இலக்கினை 6 பந்துகள் மீதம் வைத்து வெற்றிகரமாக முடித்ததால் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு தான் ஐ.பி.எல் கப் என்று பலரும் பஞ்சாப் அணியை வாழ்த்தி தங்களது பாராட்டுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35 ஆவது போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி…

ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

கொளுத்தும் கோடை வெயிலில் ஏசி, ஃபேன் இல்லாமல் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி? நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய வழிகள் முதல் இன்றைய ஸ்மார்ட் ஹேக்ஸ் வரை, வீட்டு வெப்பத்தைக் குறைக்க உதவும் 7 சூப்பர் வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

  • By admin
  • April 26, 2026
  • 5 views
கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

  • By admin
  • April 26, 2026
  • 12 views
LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

கர்நாடகாவின் சகலா: பொது சேவைகளை புரட்சிகரமாக்குகிறது – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 3 views
கர்நாடகாவின் சகலா: பொது சேவைகளை புரட்சிகரமாக்குகிறது – TN செய்திகள்

இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

  • By admin
  • April 25, 2026
  • 5 views
இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 13 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

  • By admin
  • April 25, 2026
  • 8 views
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
.site-info { display: none; }