கமுதியில் சசிகலா பேசியதாவது; “எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தது, அவரது மறைவு, அதில் ஜெயலலிதாவுக்கு நடந்த அவமானம், கட்சி பிரிவு, ஜெயலலிதாவிடம் அதிமுக வந்தது உள்ளிட்டவற்றை பேசினார். தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவைப் பற்றியும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா மறைந்த இரவு அமைச்சர்கள் தன்னை முதலமைச்சராக பதவி ஏற்க சொன்னதாகவும், அதனை, தான் மறுத்து ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க முடிவு செய்ததாகவும், நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையனை மீண்டும் சேர்க்க சொன்னதாகவும் சொன்னார்.
மேலும், “பன்னீர்செல்வத்தின் மீது எந்தக் குறையும் கிடையாது. அவரது ஆட்சி நடந்துக்கொண்டிருந்தபோதே இப்போது இருக்கும் கும்பல் என்னை சந்தித்து, என்னை பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் பதவி ஏற்க ஒரு நாளில் மூன்று முறை சந்தித்தார்கள். ஆனாலும் நான் அதனை மறுத்து, அவர்கள் தொந்தரவு செய்து அவர்களாகவே என்னை பொதுச் செயலாளராக நியமித்தார்கள். இது தான் நடந்தது.
தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் மீது அமைச்சர்கள் குறை கூறிவந்தனர். அப்போது ஒரு நாள் பன்னீர்செல்வத்துடன் அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து குறைகளை கேட்டேன். அதில் ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா வழியில் நடந்தது தெரியவந்தது. அவருக்கு தொடர்ந்து நெருக்கடி வந்தது. அதன் காரணமாக நான் முதலமைச்சராக முடிவு செய்தேன்.
அதற்குள் பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் தொடங்கினார். அவர் யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்ட அப்படி நடந்துவிட்டார். நான் முதல்வராக கடிதம் கொடுத்ததும் வழக்கில் தீர்ப்புவந்தது. உடனே எம்.எல்.ஏ.க்களை எல்லாம் கூட்டி, தற்போது இருப்பவரை முதலமைச்சராக நியமித்தோம். ஆனால், அப்போது இவர் இப்படிப்பட்டவர் எனத் தெரியாது.
பெங்களூரு சிறையில் நான் இருந்தபோது சில அமைச்சர்கள் என்னைச் சந்தித்து சென்னை சிறைக்கு மாறிவிடலாம் என்றார்கள். அதில் செங்கோட்டையன் அழுத்தி இந்த விஷயத்தைச் சொன்னார். ஆனால், அதனை நான் மறுத்துவிட்டேன். ஒருவேளை நான் சென்னைவந்திருந்தால், இன்று உங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டேன்.
இங்கு முதல்வராக இருந்தவர், பெங்களூருவில் உள்ள அதிகாரிகளை கையில்போட்டுக்கொண்டு, எனக்கு பல நெருக்கடிகளை கொடுத்தார். இதைவிட, என் கணவர் உடல் நிலை சரியில்லாதபோது 15 நாள் பரோல் கேட்டு, எஸ்.பி. அலுவலகத்தில் இருந்தபோது, இங்கிருந்த அன்றைய கமிஷ்னர் போன் செய்தார். அந்த உரையாடலை லவுட் ஸ்பீக்கரில் போட்டார்.
அந்த கமிஷ்ணர், ஐந்து நாள்தான் பந்தோபஸ்த் கொடுக்க முடியும். முதலமைச்சர் இதைச் சொன்ன சொன்னார் எனத் தெரிவித்தார். அதிலும் 14 கண்டிஷன் போட்டார்கள். செய்தியாளர்கள் சந்திக்க கூடாது, உறவினர்களை சந்திக்கக் கூடாது, மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் செல்லக் கூடாது, போய்ஸ் கார்டன் வீட்டில் தங்கக் கூடாது என பல கண்டிஷன்களை நான் இங்கு அமரவைத்துவிட்டுச் சென்ற அன்றைய தமிழ்நாடு அரசு போட்டது. என் கணவரின் மரணத்திலும் இதையேத்தான் செய்தனர்” என பேசினார். தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் சசிகலா தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.