ராமராஜன் நடிக்க மறுத்த படம்; தப்பு கணக்கு போட்ட இளையராஜா… தலைகீழாய் மாறிய ராஜ்கிரண் வாழ்க்கை..!



ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என ராஜ்கிரண் சொன்னதும், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என கூறினாராம் இளையராஜா. அதன் பின் நடந்த சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா உலகில் விநியோகஸ்தராக தன் பயணத்தை தொடங்கிய ராஜ்கிரண், ராமராஜனை வைத்து இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்தார். மூன்றாவது முயற்சியாக கஸ்தூரி ராஜா இயக்கத்தில் "என் ராசாவின் மனசிலே" என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார். ஆனால் ராமராஜன் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால், வேறுவழியின்றி ராஜ்கிரண் தானே ஹீரோவாக நடிக்கலாம் என பிளான் போட்டு அதற்காக ஆயத்தமாகி வந்தார். தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருந்தார் ராஜ்கிரண்.

இதனால் தான் ஹீரோவாக நடிக்க இருக்கும் முடிவை இளையராஜாவிடம் போய் முதல் ஆளாக கூறி இருக்கிறார் ராஜ்கிரண். அதற்கு அவர், "உனக்கு ஏன் இந்த தொல்லை, வேறொருவரை வைத்து எடு" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். இதனால் மனம் தளராத ராஜ்கிரண், இளையராஜாவின் குரு ஜி.கே வெங்கடேசிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டாராம். "நீ முதல்ல போய் படத்தை முடி, இளையராஜாவிடம் பிறகு பேசிக்கலாம்" என்று அவர் தந்த ஊக்கத்தில் ராஜ்கிரண் முழு படத்தையும் விறுவிறுவென நடித்து முடித்தார்.

நான்கு மாதங்களில் படத்தை எடுத்து முடித்த பின் இளையராஜாவை சந்தித்தபோது, "படத்தை எடுத்து முடிச்சிட்டேன், நீங்க வந்து பார்க்கணும்" என கூறி இருக்கிறார் ராஜ்கிரண். இதையடுத்து படம் பார்த்த இளையராஜா ஆச்சரியப்பட்டதோடு, "பாவலர் கிரியேசன்ஸ் பேனரில் இதை வெளியிடுவோம், ஆனால் படத்திற்கு பாடல்கள் வேண்டாம், பாடல்கள் வைத்தால் அது படத்தின் தரத்தை கெடுக்கும் வகையில் அமைந்துவிடும்" என்று கூறி இருக்கிறார்.

இளையராஜாவின் இசையே படத்தின் ஆத்மா என்று நம்பியிருந்த ராஜ்கிரண், அவர் பாடல்கள் வேண்டாம் என்று சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாலும், கடைசியில் சில பாடல்களுடனே படம் வெளியானது. "என் ராசாவின் மனசிலே" மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரணை கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாற்றியது. பின்னாளில் அவர் குணச்சித்திர நடிகராகவும் மாறி தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் தனுஷ் இயக்கிய இட்லி கடை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Thank You

Related Posts

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

April 20 Indraya Rasi Palan : இன்றைய ராசி பலன்கள் 20.04.2026 (திங்கள்கிழமை) – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!
.site-info { display: none; }