ஐ.பி.எல் வரலாற்றின் மிகச்சிறந்த 2 அணிகள் இதுதான். அணில் கும்ப்ளே தேர்வு


அனில் கும்ப்ளே


– விளம்பரம் –

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் வேளையில் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் சீசனானது மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றின் மிகச்சிறந்த அணிகள் : அணில் கும்ப்ளே கணிப்பு

எதிர்வரும் இந்த 2026 ஐபிஎல் தொடரானது நெருங்கி வரும் வேளையில் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த அணிகள் எது? மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் யார்? என்பது போன்ற பல்வேறு விவாதங்கள் முன்னாள் வீரர்களின் மத்தியில் நிலவி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே ஐபிஎல் வரலாற்றின் சிறப்பு அணிகள் குறித்த தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

– விளம்பரம் –

அதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 18 ஐபிஎல் சீசனின் அடிப்படையில் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த இரண்டு அணிகளாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளே திகழ்கின்றன என்று அவர் தனது கருத்தினை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரின் இரண்டு வெற்றிகரமான அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

இந்த இரண்டு அணிகளின் வெற்றிக்கு காரணங்கள் வேறுபட்டவை என்றாலும் அந்த இரு அணிகளுமே ஜாம்பவான் அணிகள் என்று கூறுவேன். சென்னை அணி பெரும்பாலும் அனுபவம் உள்ள வீரர்களை நம்பி செயல்படுவதாகவும், மும்பை அணி இளம் வீரர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் சிறந்து விளங்குவதாகவும் அணில் கும்ப்ளே கூறினார்.

– விளம்பரம் –

அவர் கூறியபடியே மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற மிகச் சிறந்த வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களாக உயர்ந்துள்ளனர். அதேபோன்று சென்னை அணியில் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட அனுபவ வீரர்களை வைத்து அவர்களை மெருகேற்றி தோனி கோப்பையை கைப்பற்றி உள்ளார்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை விட தொடர்நாயகன் விருதுக்கு தகுதியானவர் இவர்தான் – ஏ.பி.டி வில்லியர்ஸ் பேச்சு

ஆனால் தற்போதுள்ள சென்னை அணியில் இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த ஐபிஎல் தொடர்பானது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28-ம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்



Thank You

Related Posts

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

April 20 Indraya Rasi Palan : இன்றைய ராசி பலன்கள் 20.04.2026 (திங்கள்கிழமை) – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!
.site-info { display: none; }