கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேர் மீதான வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
“மே 4ஆம் தேதி வரை கனவு காணலாம்…” – தவெக குறித்து தமிழிசை கருத்து | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 28, 2026 10:13 PM IST தவெக தலைவர் விஜய் 200க்கும் மேல் இடங்கள் வெல்வார் என்ற செங்கோட்டையன் கூற்றை கனவு, ஓவரான சத்தம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். செய்தி18 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம்…