– விளம்பரம் –
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்சி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். களத்தில் அவர் எவ்வளவு பந்துகளை எதிர்கொள்கிறாரோ அதைவிட இரண்டு மடங்கு ரன்களை அதிகமாக குவிக்கக்கூடிய வீரராக இருப்பதனால் போட்டியின் ஆரம்பத்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று எதிரணிகள் முயற்சி செய்து வருகின்றன.
சூர்யவன்ஷியை வீழ்த்துவது குறித்து : புஜாரா ஐடியா
கடைசியாக நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கூட 37 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் என 103 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். எனவே அவரது அதிரடியான ஆட்டம் இனியும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– விளம்பரம் –
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கும் வேளையில் அவரை எவ்வாறு வீழ்த்த வேண்டும்? என்பது குறித்து பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான சத்தீஸ்வர் புஜாரா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
பஞ்சாப் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடதுகை பந்துவீச்சாளர் என்பதால் ஓவர் ஸ்டெம்பில் இருந்து வீசுவார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் பந்துவீசும் போது மிடில் மற்றும் ஆப் ஸ்டம்ப் லைனில் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும். குறிப்பாக ஒரு ஓவரில் குறைந்தது நான்கு பந்துகளை அப்படி வீசினால் அது வைபவ் சூர்யவன்ஷிக்கு அழுத்தத்தை தரும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது – வீரேந்திர சேவாக் ஓபன்டாக்
மேலும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது வைபவ் சூர்யவன்சி அந்த லைனில் தான் கஷ்டப்பட்டார். மோஷன் கான் தொடர்ச்சியாக அவருக்கு அந்த லைனில் தான் பந்து வீசினார். எனவே அதைப்போன்று பஞ்சாப் பவுலர்கள் அனைவரும் ஆப் மற்றும் மிடில் ஸ்டம்பை குறி வைத்து தொடர்ந்து வீசினால் நிச்சயம் சூரியவன்சியை வீழ்த்த முடியும் என புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்