ஓ பன்னீர்செல்வம் சமீபத்திய செய்தி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது, எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது. அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு. என்னுடைய அரசியல் லாபத்திற்காக திமுகவிற்கு செல்கிறேன் என்று சொன்னால் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓபிஎஸ்.
இவற்றை எல்லாம் மன்னித்து தான் ஓ.பன்னீர் செல்வத்தை நகர்மன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் வரை ஆக்கியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை தொடர முடியாத சூழ்நிலை இருந்தபோது, ஓபிஎஸ்-க்கு முதலமைச்சர் பதவி வழங்கினார். அதற்குத்தான் நன்றி கடன் காட்டியிருப்பதாக நாட்டு மக்கள் கூறி இருக்கின்றனர்.
ஓபிஎஸ் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா?
திமுகவை எதிர்த்து தான் அதிமுக.,வை எம்ஜிஆர் தொடங்கினார். அதிமுகவுக்கு அரசியல் நேர் எதிரி திமுக தான். தீய சக்தி என்ற அடைமொழியோடு திமுகவை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்தியவர் எம். ஜி.ஆர். அதிமுக தொண்டர்களை எம்ஜிஆர் ரத்தத்தின் ரத்தங்கள் என்றுதான் அழைப்பார். அதிமுக ரத்தம் இருக்கும் வரை தொண்டர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு ஓபிஎஸ் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா..? என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
எந்த கட்சியாலும் அதிமுக வாக்கிற்கு பாதிப்பில்லை
ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி நாட்டு மக்கள் இன்று தெரிந்து கொண்டனர். நேற்றைய தினம் சம்பிரதாயமாக தான் திமுகவில் இணைந்திருக்கிறார். எவ்வளவு நம்பிக்கை துரோகமாக இந்த இயக்கத்தில் பணியாற்றி இருந்திருக்கிறார் என்பது இன்றைக்கு அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எந்த கட்சியாலும் அதிமுக வாக்கு வங்கியை பாதிக்க முடியாது. அதிமுக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் ஒரு இலையை எம்ஜிஆராகவும், மற்றொரு இலையை ஜெயலலிதாவாக பார்ப்பார்கள். வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது
தவெக தலைவர் விஜய்யை பார்த்து திமுக தான் பயப்படுகிறது. அதற்காகத்தான் எல்லோரையும் திமுக சேர்த்துக்கொள்கிறது. திமுக ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது. ஓவர் லக்கேஜ் வண்டி ஓடாது. கூட்டணி என்ற பெயரில் இருக்கிற கட்சிகளை எல்லாம் இழுத்து போடுகின்றனர். அனைவருக்கும் ஒருமித்த கருத்து வராது. ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். அதையும் தாண்டி திரும்ப சேர்ந்தால் ஒட்டோடு உறவோடு தேர்தலில் பயணிக்க முடியாது.
வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவது அதிமுக கூட்டணி தான்
மனம் வெதும்பி தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அங்கே பயணிக்கிறார். இந்த நிலையில் தான் தேமுதிக இணைந்துள்ளது. தேமுதிக, திமுக பற்றி பேசிய விஷயங்களை அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அன்றைக்கு ஒரு வார்த்தை, இன்றைக்கு ஒரு வார்த்தை என்று சொன்னால் தேமுதிக நிலைப்பாட்டை மக்கள் ரசிக்கவில்லை. எல்லா கட்சியுடனும் நட்புடன் இருப்பதாக கூறினர். அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவது அதிமுக கூட்டணி தான். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க: இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை
மேலும் படிக்க: இந்த 8 ரயில்கள் மாம்பலம் ஸ்டேஷனில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android இணைப்பு: https://bit.ly/3AIMb22
ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ