– விளம்பரம் –
இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பிரமாதமான பார்ம் காரணமாக இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றியையும் பெற்று வருகிறது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும், அதற்கடுத்து வரும் இறுதிகட்ட ஆட்டங்களிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இஷான் கிஷனை பாராட்டிய : இர்பான் பதான்
ஏற்கனவே இந்திய வாரியத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியை விட்டு விலகியிருந்த அவர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்து மீண்டும் இந்திய அணியின் துவக்க வீரராக வாய்ப்பை பிடித்தார். அப்படி தனக்கு கிடைக்க வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய அவர் தற்போது டி20 அணியில் துவக்க வீரராக நீக்க முடியாத இடத்தினை பிடித்துள்ளார்.
– விளம்பரம் –
அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இஷான் கிஷன் அடிக்கும் ஃபுல் ஷாட் ரோகித் சர்மா போன்று இருப்பதாக முன்னாள் இந்திய வீரரான இர்ஃபான் பதான் அவரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இஷான் கிஷன் தனது வாழ்க்கையில் சிறப்பான ஃபார்மில் தற்போது விளையாடி வருகிறார்.
அதிலும் குறிப்பாக லெஃக் சைடு வரும் பந்துகளை அவர் மிகச் சிறப்பாக அடித்து விளையாடுகிறார். அதிலும் குறிப்பாக போட்டியின் ஆரம்பத்திலேயே பவுலர்கள் ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் அதனை ரோகித் சர்மா போன்றே புல் ஷாட் அடித்து சிக்சருக்கு விரட்டுகிறார். இஷான் கிஷனின் நம்பிக்கைதான் அவரது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா இந்த ஒரு விடயத்தை சரி செய்ஞ்சா போதும்.. ரன் தானா வரும் – இர்பான் பதான் கருத்து
எந்த ஒரு பந்து வீச்சாளருக்கு எதிராகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் அதிரடியாக விளையாடுகிறார். அவரது அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணியும் நல்ல துவக்கத்தை பெறுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புவதாக இர்பான் பதான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்