70 வயதை கடந்த இந்திய நடிகர்கள் இன்றும் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர்: இந்தியத் திரையுலகில் 70 வயதை கடந்த பிறகும் பல நடிகர்கள் ஹீரோக்களாக நடித்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகின்றனர்.அப்படிப்பட்ட 5 சூப்பர் ஸ்டார்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
- வயது : 83
அக்டோபர் 11, 1942ல் பிறந்த அமிதாப் பச்சன், பாலிவுட்டின் மெகா ஸ்டார். 6 தசாப்தங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘கல்கி 2898 AD’ ரூ.1042.25 கோடி வசூலித்தது. அடுத்து ‘கல்கி 2898 AD பார்ட் 2’, ‘ராமாயண் பார்ட் 1’ படங்களில் நடிக்கிறார்.
- வயது : 75
டிசம்பர் 12, 1950ல் பிறந்த ரஜினியின் கிரேஸ் இன்றும் அப்படியே உள்ளது. 5 தசாப்தங்களில் 170 படங்களில் நடித்துள்ளார். இவரது ‘கூலி’ ரூ.518 கோடி வசூலித்தது. அடுத்து ‘ஜெயிலர் 2’, ‘தலைவர் 173’ படங்களில் நடிக்கிறார்.
- வயது : 74
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி 1971 முதல் நடித்து வருகிறார். செப்டம்பர் 7, 1951ல் பிறந்த இவர், 425க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது ‘களம்காவல்’ ரூ.82.75 கோடி வசூலித்தது. அடுத்து ‘பேட்ரியாட்’, ‘பதயாத்ரா’ படங்களில் நடிக்கிறார்.
- வயது : 71
நவம்பர் 7, 1954ல் பிறந்த கமல்ஹாசன், 6 தசாப்தங்களாக நடித்து வருகிறார். ‘கல்கி 2898 AD’ வெற்றிக்கு பிறகு ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ தோல்வியடைந்தன. ‘KH237’ மற்றும் நெல்சன் திலீப்குமார் படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வயது : 70
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஆகஸ்ட் 22, 1955ல் பிறந்தார். 5 தசாப்தங்களாக 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது ‘மன் சங்கர் வர் பிரசாத் காரு’ ரூ.297.50 கோடி வசூலித்தது. அடுத்து ‘விஸ்வம்பரா’, ‘சிரு-ஓடேலா’ படங்களில் நடிக்கிறார்.