Tasmac: மதுபிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதெல்லம் விடுமுறை? முழு விபரம் இதோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மது விற்பனை அல்லது பார்கள், மதுக்கடை, தங்கும் விடுதி, உணவகம் மற்றும் பிற நிறுவனங்களும், மது விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் (முதற்கட்டம்) வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெறும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 135சி-ன்படி, வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முந்தைய 48 மணிநேரத்திலிருந்து (ஏப்ரல் 21ம் தேதி மாலை 6 மணி  முதல்) எந்தவொரு விடுதி, உணவகம், மதுக்கடைகள், கடைகள் அல்லது தனியார், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மதுபானங்கள் அல்லது போதைப்பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்யவோ கூடாது.

மேற்கூறிய சட்ட விதிமுறையின் அடிப்படையில், பொதுத்தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அதற்கான நேரம் நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரக் காலத்தை, தொடர்புடைய மாநில/யூனியன் பிரதேச சட்டங்களின் கீழ் மதுவிலக்கு தினமாக அறிவித்து அதற்கான அறிவிக்கை வெளியிடப்படும். மறுவாக்குப்பதிவு தேவைப்படும் வாக்குச் சாவடிகளில் இதே விதிமுறை பொருந்தும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ம் தேதி திங்கட்கிழமையன்று, சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தொடர்புடைய சட்டங்களின் கீழ், மதுவிலக்கு தினமாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது.

மேற்கூறிய நாட்களில், மது விற்பனை அல்லது பார்கள், மதுக்கடை, தங்கும் விடுதி, உணவகம் மற்றும் பிற நிறுவனங்களும், மது விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது.

மதுபானங்களை இருப்பு வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் பல்வேறு வகையான உரிமங்களின் கீழ் செயல்படும் தனியார் அல்லாத மன்றங்கள், நட்சத்திரத் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்த நாட்களில் மது விநியோகிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

மேற்கூறிய காலகட்டத்தில், தனிநபர்கள் மதுபானங்களை இருப்பு வைத்துக் கொள்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும், உரிமம் பெறாத வளாகங்களில் மதுபானங்களை இருப்பு வைப்பது தொடர்பாக மத்திய கலால் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

Thank You

Related Posts

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 21, 2026 7:11 PM IST பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அன்புமணி vs ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை…

“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 21, 2026 5:38 PM IST முதல் தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். செய்தி18 எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முதல்தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

  • By admin
  • April 22, 2026
  • 7 views
இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

Tasmac: மதுபிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதெல்லம் விடுமுறை? முழு விபரம் இதோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 4 views
Tasmac: மதுபிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதெல்லம் விடுமுறை? முழு விபரம் இதோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

லிஃப்ட் | இன்னா மயிலு பாடல் வீடியோ | சிவகார்த்திகேயன் | கவின் | அமிர்தா | வினீத் | பிரிட்டோ மைக்கேல் | ஹெப்சி – அஹாதமிழ்

  • By admin
  • April 21, 2026
  • 4 views
லிஃப்ட் | இன்னா மயிலு பாடல் வீடியோ | சிவகார்த்திகேயன் | கவின் | அமிர்தா | வினீத் | பிரிட்டோ மைக்கேல் | ஹெப்சி – அஹாதமிழ்

Free PMP Exam Brain dumps – Pass Fast with Latest Questions – TN News

  • By admin
  • April 21, 2026
  • 7 views

Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

  • By admin
  • April 21, 2026
  • 9 views
Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 11 views
பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }