பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அன்புமணி vs ராமதாஸ்
அன்புமணி vs ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாமகவில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை 13வது உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாமக தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி ராமதாஸ் நீடித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தனது புகழை பயன்படுத்துவதாகவும், தன் புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்

தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தர்ம பிரபு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து அன்புமணி தரப்பு 18 பாமக வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தர்மபிரபு, அன்புமணி ராமதாஸ் தரப்பினர், பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

Thank You

Related Posts

“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 21, 2026 5:38 PM IST முதல் தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். செய்தி18 எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முதல்தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க…

தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 21, 2026 11:07 AM IST Weather Update | தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் (கோப்பு படம்) தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

  • By admin
  • April 21, 2026
  • 7 views
Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 9 views
பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

BJP Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை! | Rs 10000 For Every Family 3 Free Gas Cylinders Education Loan Waiver Bjp Manifesto

  • By admin
  • April 21, 2026
  • 8 views
BJP Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை! | Rs 10000 For Every Family 3 Free Gas Cylinders Education Loan Waiver Bjp Manifesto

“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 8 views
“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" – ‘கருப்பு’ பற்றி சாய் அபயங்கர்

  • By admin
  • April 21, 2026
  • 11 views
"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" – ‘கருப்பு’ பற்றி சாய் அபயங்கர்

Free PMP Exam Brain dumps – Pass Fast with Latest Questions – TN News

  • By admin
  • April 21, 2026
  • 10 views
.site-info { display: none; }