5 ஆண்டுகள் 60 போட்டிகள்.. ஒருவழியாக முதல் முறையாக திலக் வர்மா பெற்ற பரிசு

திலகம்

– விளம்பரம் –

அகமதாபாத் நகரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு நேற்று பெற்ற இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலிலும் தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முடிவுக்கு வந்த திலக் வர்மாவின் காத்திருப்பு :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 45 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

– விளம்பரம் –

அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டநாயகன் விருதினை பெற்றதன் மூலம் அவரது ஐந்து ஆண்டுகால ஏக்கம் முடிவு வந்துள்ளது.

அதாவது கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் இந்தப் போட்டிக்கு முன்னதாக 59 ஆட்டங்களில் விளையாடி ஒருமுறை கூட ஆட்டநாயகன் விருதினை வென்றது கிடையாது. ஆனால் நேற்று அவர் விளையாடிய 60-வது ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல் – என்ன நடந்தது?

ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் 49 போட்டிகளில் விளையாடி 2 சதத்தை அடித்துள்ள வேளையில் நேற்று தான் ஐ.பி.எல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது தற்போது ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன்…

Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

Wednesday Astrological Remedies For Career Growth : உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கான எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீகப் பரிகாரங்கள்.. என்னதான் இரவு பகலாக உழைத்தாலும், சிலருக்கு வேலையில் உரிய அங்கீகாரமோ அல்லது பதவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

5 ஆண்டுகள் 60 போட்டிகள்.. ஒருவழியாக முதல் முறையாக திலக் வர்மா பெற்ற பரிசு

  • By admin
  • April 22, 2026
  • 2 views
5 ஆண்டுகள் 60 போட்டிகள்.. ஒருவழியாக முதல் முறையாக திலக் வர்மா பெற்ற பரிசு

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 1 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam

இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

  • By admin
  • April 22, 2026
  • 7 views
இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

Tasmac: மதுபிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதெல்லம் விடுமுறை? முழு விபரம் இதோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 5 views
Tasmac: மதுபிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதெல்லம் விடுமுறை? முழு விபரம் இதோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

லிஃப்ட் | இன்னா மயிலு பாடல் வீடியோ | சிவகார்த்திகேயன் | கவின் | அமிர்தா | வினீத் | பிரிட்டோ மைக்கேல் | ஹெப்சி – அஹாதமிழ்

  • By admin
  • April 21, 2026
  • 4 views
லிஃப்ட் | இன்னா மயிலு பாடல் வீடியோ | சிவகார்த்திகேயன் | கவின் | அமிர்தா | வினீத் | பிரிட்டோ மைக்கேல் | ஹெப்சி – அஹாதமிழ்

Free PMP Exam Brain dumps – Pass Fast with Latest Questions – TN News

  • By admin
  • April 21, 2026
  • 8 views
.site-info { display: none; }