சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட இலங்கை.. இங்கிலாந்து அணி பிரம்மாண்ட வெற்றி! | England Thrash Sri Lanka By 51 Runs In T20 Wc Super 8 Salt Stars

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி வீரர் பில் சால்ட் 40 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் அடித்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். பின்பு பேட்டிங் செய்த இலங்கை அணி 16.4 ஓவரில் வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை தழுவியது. அந்த அணி கேப்டன் தசுன் ஷனகா மட்டும் 30 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸ் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் டாவ்சன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பில் சால்ட் சாதனை

இந்த வெற்றியின் மூலம், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து தனது 12வது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது குறுகிய வடிவ கிரிக்கெட்டில் அவர்களின் தொடர்ச்சியான திறனையும், வலிமையையும் காட்டுகிறது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட், ஜானி பேர்ஸ்டோவை முந்தி, டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது 57 டி20 போட்டிகளில், 53 இன்னிங்ஸ்களில் 36.38 சராசரி மற்றும் 166.50 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,710 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்கள், எட்டு அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 141* ஆகும்.

மலிங்காவை முந்திய அடில் ரஷித்

இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத், ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவை முந்தி, ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளாக விளையாடி வரும் அடில் ரஷீத் இலங்கைக்கு எதிராக 3.4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Thank You

Related Posts

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 8 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 7 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 13 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்
.site-info { display: none; }