தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்? – டெல்லி பயணத்தில் ஏற்பட்ட உடன்பாடு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி18
செய்தி18

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமித் ஷா உடனான டிடிவி தினகரனின் ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், டெல்லி சென்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவே அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் அமித் ஷாவை, தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு, தேர்தல் களம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது.

அமித் ஷா உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷாவிடம் பேசவில்லை. ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்தே பேசினேன். நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதலமைச்சர் பயப்படுகிறார். 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை எளிமையாக பெற்றுத் தரும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கூட்டணி முழுமையடைந்துவிட்டது. சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை.” என்றார்.

இதற்கிடையே தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் சைதாப்பேட்டை, நாங்குநேரி, சோளிங்கர் உள்ளிட்ட 12 தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }