உள்துறை செயலாளர் நீக்கம், அடுத்தடுத்து அதிகாரிகள் மாற்றம்:  திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் தேர்தல் ஆணையம்  – Kumudam


தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அந்த வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒரே பதவியில் இருப்பவர்கள் மற்றும் புகாருக்குள்ளான, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு பதிலாக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அருண் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இன்றைய தினம் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்து மாலை 5 மணிக்குள் பதவி ஏற்க உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் மாற்றத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதிகாரிகள் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பி டிஆர் பாலுவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.  உள்துறை செயலாளர் மாற்றி திமுகவுக்கு மற்றொரு ஷாக்கை தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது.



Thank You

Related Posts

தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த அவர் தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்…

TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 9:47 PM IST 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

  • By admin
  • April 23, 2026
  • 6 views
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
.site-info { display: none; }