கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. ராமநாதசுவாமி கோவில் அன்னதானம் பாதிப்பா ? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

ராமநாதசுவாமி கோவிலின் அன்னதானம் திட்டத்திற்கு 10 நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் கேஸ் சிலிண்டர் உள்ளதால் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

+

ராமநாதசுவாமி

ராமநாதசுவாமி கோவில் அன்னதானம்

ராமேஸ்வரம் நகர்‌பகுதியில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ராமநாதசுவாமி கோவிலின் அன்னதானம் திட்டத்திற்கு 10 நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் கேஸ் சிலிண்டர் உள்ளதால் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் எந்தவொரு பாதிப்பும் இன்றி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு வாரமாக போர் தொடுத்து வருகிறது. பதிலுக்கு ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல், துபாய், கத்தார், பக்ரைன், ஜோர்டான், ஈராக் போன்ற நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பீப்பாய்க்கு 110 டாலர் முதல் 120 டாலர் வரை விலை உயர்ந்து மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்காமல் இந்தியாவிலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் நகரில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மிஞ்சியுள்ள கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். ஓரிரு நாட்களில் முழுவதும் தீர்ந்து தட்டுப்பாடு  ஏற்பட்டு தேநீர் கடைகள், உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தினமும் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரை பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு செல்கின்றனர்.

அன்னதானம் உணவுகள் சமைப்பதற்கு நாள் ஒன்றிற்கு மூன்று சிலிண்டர் தேவைப்படுகிறது. தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கையிருப்பில் உள்ள சிலிண்டர் வைத்து 10 நாட்கள் வரை சமையலுக்கு பயன்படுத்த முடியும். இதன் பிறகு பயோ கேஸ் மூலம் உணவு சமைக்க முடியும். பயோ கேஸ் நான் ஒன்றிற்கு இரண்டு பயன்படுத்த முடியும் என்பதால் அடுத்த ஒரு 10 நாட்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது, உணவகங்கள் மூடினாலும் வரும் பக்தர்களுக்கு அன்னதான திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும். அதற்குள் தீர்வு கிடைத்து விடும் என ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 2 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam
.site-info { display: none; }