கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி செய்வதில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதிகளை இறுதி செய்து, தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த வாரம் சென்னை வர இருப்பதாகவும், யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.