18 ஓவர் வரை ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த





ரஹானே


– விளம்பரம் –

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

லக்னோ அணிக்கெதிரான தோல்வி குறித்து : ரஹானே வருத்தம்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரகுவன்சி 45 ரன்களையும், ரஹானே 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

– விளம்பரம் –

இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக முகுல் சவுத்ரி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரகானே கூறியதாவது : இந்த போட்டியில் தோல்வியை ஏற்றுக்கொள்வது உண்மையிலேயே கடினமான ஒன்று.

ஆனாலும் எங்களது அணியின் வீரர்களின் செயல்பாட்டை நினைத்து பெருமையாக உணர்கிறேன். எங்களது அணியின் வீரர்களும் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஆனால் இந்த போட்டியின் முடிவை முகுல் சவுத்ரியின் இன்னிங்ஸ் மாற்றிவிட்டது. அவர் மிகவும் தைரியமாக ஆடினார். இந்த போட்டியில் தவறு எங்கு நடந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஆனாலும் 18-வது ஓவர் வரை போட்டி எங்கள் கையில் இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் முகுல் மிகச் சிறப்பாக விளையாடி அவர்களது அணிக்கு வெற்றி பெற்று தந்தார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டார்.. ஆனா மற்றொரு முக்கிய வீரர் விளையாடுவார் – வெளியான தகவல்

கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற போது அனைத்து பந்துகளையும் அவர் விளாசவே முயற்சி செய்தார். அவரது தைரியமான ஆட்டத்தினால் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இந்த போட்டியில் எங்களது பீல்டிங்கும் சற்று மோசமாக இருந்தது. ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 10 views
கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 1 views
தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்
.site-info { display: none; }