பும்ராவுக்கு எதிரா முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க இதுவே காரணம்

வைபவ் மற்றும் பும்ரா

– விளம்பரம் –

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 15 வயது இளம்வீரர் வைபவ் சூர்யவன்சி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது 14 வயதில் அறிமுகமாகி ஐ.பி.எல் போட்டிகளில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அதோடு தான் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு விரட்டிய அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருந்தார்.

பும்ராவை எதிர்கொண்டது குறித்து : வைபவ் சூர்யவன்ஷி பேச்சு

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக நடைபெற்று முடிந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளை சந்தித்த அவர் 39 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

– விளம்பரம் –

அந்த போட்டியின் போது உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவை எதிர்த்து எவ்வாறு விளையாடப்போகிறார்? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் பும்ராவை சந்தித்த முதல் பந்தியிலேயே சிதக்ஸருக்கு விரட்டி அசத்தினார். அதுமட்டும் இன்றி அதே ஓவரில் மீண்டும் ஒருமுறை சிக்ஸ் அடித்து ஒரே ஓவரில் அவருக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களையும் விளாசி சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் பும்ராவை தான் முதன் முதலாக எதிர்கொண்டது குறித்து சில கருத்துக்களை தற்போது அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் ஒரு பெரிய பவுலரை எதிர்த்து விளையாடுகிறேன் என்பதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. அந்த பவுலரை விட அவர் வீசிய பந்தில் தான் அதிக கவனத்தில் செலுத்தினேன். பும்ரா என் முன்னால் இருந்ததால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது உண்மைதான்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : முதல் வெற்றியை பெற்ற பிறகு கேப்டன் சுப்மன் கில்லுக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம் – என்ன நடந்தது?

ஆனாலும் என்னுடைய ஆட்டத்தை நம்பி பதட்டத்தை விட்டு விட்டு பந்தில் கவனம் செலுத்தினேன். அதேபோன்று பும்ராவுக்கு எதிராக சில பயிற்சிகளையும் நான் மேற்கொண்டிருந்தேன். அதாவது குறுகிய தூரத்தில் இருந்து மிக வேகமாக பந்தை வீச சொல்லி பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். அது போட்டியின் போது அவரை எதிர்கொள்ள உதவியது என்றும் வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }