ரிஷப் பண்ட் கூறிய அந்த வார்த்தைகள் தான் எனக்கு நம்பிக்கை தந்தது





முகுல் மற்றும் பந்த்


– விளம்பரம் –

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15 ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ரிஷப் பண்ட் அளித்த ஆதரவு குறித்து பேசிய : முகுல் சவுத்ரி

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது லக்னோ அணியின் சார்பாக ஏழாவது வீரராக களமிறங்கிய முகுல் சவுத்ரி 27 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

– விளம்பரம் –

நேற்று முகுல் சவுத்ரி ஆடிய இந்த இன்னிங்ஸ் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வரும் வேளையில் இந்த செயல்பாட்டிற்கு பிறகு தனக்கு லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் எவ்வாறு ஆதரவு தெரிவித்தார்? என்பது குறித்து சில கருத்துக்களை முகுல் சவுத்ரி பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

கடந்த போட்டியின் போது எனக்கு நான்கு முதல் ஐந்து பந்துகள் மட்டுமே விளையாட கிடைத்தது. அந்த பந்துகளை என்னால் சரியாக அடித்து ஆட முடியவில்லை. அப்போது நான் என்னுடைய கேப்டனிடம் சென்று பேசினேன். அதற்கு ரிஷப் பண்ட் : நீ எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்க வேண்டாம். உன்னுடைய செயல்முறையின் மீது மட்டுமே கவனம் செலுத்து. அதிகமாக யோசித்தால் அதுவே உனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : 16 வயசுலயே பும்ரா ரொம்ப டேஞ்சரா இருந்தார்.. அவரை நான் வேணாம்னு சொல்லிட்டேன் – யுவ்ராஜ் சிங் பகிர்வு

எனவே இனிவரும் போட்டிகளில் பந்தை பார்த்து உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்து விளையாடு. நாங்கள் உன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எனக்கு ஆதரவாக இருந்தார். இப்படி நான் சரியாக விளையாடாத போதும் அவர் கூறிய அந்த ஆதரவான வார்த்தைகள் தான் இன்று என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என முகுல் சவுத்ரி கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Rahu Ketu Peyarchi 2026 Predictions for all 12 Zodiac Signs: 2026-ம் ஆண்டு நிகழப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் பலன்கள், ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஜோதிடத்தில் நிழல்…

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 5 views
75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

Latest CCSP Exam Questions and Answers – Study Online and Pass with Confidence – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 5 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 7 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 9 views
.site-info { display: none; }