75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

திமுக பாக முகவர்கள் 75 ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் கால் பிரிட்ஜிங் முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடினார்.

செய்தி18
செய்தி18

எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்றும் எந்த வித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தேர்தல் நாளில் கடைசி வாக்கு பதிவாகும் வரை வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்கள் இருக்க வேண்டும் என கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக பாக முகவர்கள் 75 ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் கால் பிரிட்ஜிங் முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட இடைப்பட்ட நாட்களில் முழு மூச்சுடன் பாக முகவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருப்புச் சட்டமான Delimitation Bill-ல் நாம் வென்றது டிரெய்லர்தான், இன்னும் பல போர்கள் நம் முன்பு இருக்கின்றன என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனக் கூறிய முதல்வர், தமிழ்நாட்டைத் தகர்க்க வரும் டெல்லி அணியைத் தடுத்து நிறுத்த நமது கூட்டணியால் தான் முடியும் என உறுதிபடத் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று ஆதரவு கேட்க வேண்டும் என்றும், வாக்குப் பதிவு நாளில் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் ஒன்று கூட விடுபட்டு விடக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்றும் எந்த வித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.



Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 5 views
75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 5 views
மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

Latest CCSP Exam Questions and Answers – Study Online and Pass with Confidence – TN News

  • By admin
  • April 20, 2026
  • 5 views

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 4 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 7 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views
.site-info { display: none; }