ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது

சேவாக் மற்றும் ஸ்ரேயாஸ்

– விளம்பரம் –

கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது 8 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதோடு இதுவரை இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாகவும் பஞ்சாப் அணி இருந்து வருகிறது.

யாருக்குமே இந்திய டி20 அணியில் இடமில்லை : சேவாக் கருத்து

அதேபோன்று மற்றொரு புறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு சில அணிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

– விளம்பரம் –

மேலும் பெங்களூரு அணி வீரர்களான தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் போன்றோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடும் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் தங்களது அற்புதமான பார்மை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்திய டி20 அணியில் இந்த ஐந்து வீரர்களுக்குமே இடம் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

பலரும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை தற்போதைய இந்திய டி20 அணியில் எந்த ஒரு வீரருக்கும் இடமில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஆகிய 5 பேரும் இந்த ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. எப்போது கம்பேக்? – விவரம் இதோ

ஆனால் இந்திய டி20 அணியில் யாரை நீக்கிவிட்டு இவர்களுக்கு இடம் கொடுக்க முடியும். ஏற்கனவே இந்திய டி20 அணி அடுத்தடுத்து இரண்டு உலக கோப்பையை வெற்றி பெற்ற அணியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சூரியகுமார் யாதவ் தலைமையில் அவர்கள் எந்த ஒரு தொடரையும் இழக்கவில்லை. எனவே எந்த வீரரை வெளியேற்றிவிட்டு புதிய வீரருக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் எனவே ஐ.பி.எல் பார்மை வைத்து யாருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எடுக்க இதை செய்யுங்க போதும்.. பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த புஜாரா

– விளம்பரம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்சி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். களத்தில்…

நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது லீக் போட்டியானது இன்று முள்ளன்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

  • By admin
  • April 29, 2026
  • 3 views
முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது

  • By admin
  • April 29, 2026
  • 4 views
ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது

முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி – Kumudam

  • By admin
  • April 29, 2026
  • 8 views
முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி – Kumudam

Parthiban | சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 29, 2026
  • 13 views
Parthiban | சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்! | பொழுதுபோக்கு செய்திகள்

உத்தரபிரதேச சுற்றுலாவைக் கண்டறியுங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 29, 2026
  • 14 views
உத்தரபிரதேச சுற்றுலாவைக் கண்டறியுங்கள் – TN செய்திகள்

வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எடுக்க இதை செய்யுங்க போதும்.. பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த புஜாரா

  • By admin
  • April 29, 2026
  • 12 views
வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எடுக்க இதை செய்யுங்க போதும்.. பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த புஜாரா
.site-info { display: none; }