முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பும் வெகுவாகக் குறைந்து வருகிறது. வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள செயற்கை குட்டைகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறிவரும் நிலையில், வனப்பகுதியில் நிலவும் அதீதமான வறட்சியின் காரணமாகவே யானைகள் இறந்து வருவதாகக் கூறுகின்றனர்.

உயிரிழந்த யானை

உயிரிழந்த யானை

இது குறித்து விளக்கம் அளித்துள்ள முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், “முதுமலை, சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை நேற்று முன்தினம் ரோந்து சென்ற பணியாளர்கள் பார்த்துள்ளனர்.

அதேபோல் நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க பெண் யானை கடந்த 25 – ம் தேதி உயிரிழந்துள்ளது. தெப்பகாடு வனச்சரகத்திற்குட்பட்ட மாயார் நீர் அருவி பகுதியில் 4 வயது ஆண் யானை குட்டி ஒன்றும் உயிரிழந்துள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. சீகூர், ஆனைக்கட்டி ஆறுகள் வறண்டுள்ளன. யானைகளின் இறப்புக்கு வறட்சி காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வன விலங்குகளின் தாகம் தீர்க்க மாற்று வழிமுறைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Thank You

Related Posts

தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam

நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களிலா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். இதற்காக தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது. ஆனால் ப.சிதம்​பரத்தை கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்​டு​ வந்​து, வெறும் 28…

குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சேர்த்துக்கொடுத்து கலோரிகளை பேலன்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கை நீங்கள் எந்த வடிவில் சமைத்துக்கொடுக்கிறீர்கள் என்பது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

  • By admin
  • April 29, 2026
  • 4 views
முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது

  • By admin
  • April 29, 2026
  • 4 views
ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது

முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி – Kumudam

  • By admin
  • April 29, 2026
  • 9 views
முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி – Kumudam

Parthiban | சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 29, 2026
  • 14 views
Parthiban | சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்! | பொழுதுபோக்கு செய்திகள்

உத்தரபிரதேச சுற்றுலாவைக் கண்டறியுங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 29, 2026
  • 15 views
உத்தரபிரதேச சுற்றுலாவைக் கண்டறியுங்கள் – TN செய்திகள்

வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எடுக்க இதை செய்யுங்க போதும்.. பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த புஜாரா

  • By admin
  • April 29, 2026
  • 12 views
வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எடுக்க இதை செய்யுங்க போதும்.. பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த புஜாரா
.site-info { display: none; }