கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
நடிகர் பார்த்திபன் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தாரர் சான்று வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் பார்த்திபன் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தாரர் சான்று வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஜாதி, மதமற்றவர் என சான்று வழங்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி – மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பித்ததாகக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி மதம் மற்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகர் பார்த்திபனுக்கு, ஜாதி, மதம் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தாரர், ஏப்ரல் 27-ம் தேதி சான்று வழங்கியுள்ளார். பார்த்திபன் தாக்கல் செய்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணைக்காக, நடிகர் பார்த்திபன் நாளை நீதிமன்றம் வர உள்ளார்.
ஏப்ரல் 28, 2026 10:07 PM IST