டி20 போட்டிகளில் சிறந்த துவக்க வீரர் யார்? விராட் கோலி தேர்வு செய்த அந்த நபர் யார் தெரியுமா?





விராட் கோலி


– விளம்பரம் –

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணி கடந்த ஆண்டு 18-ஆவது சீசனில் முதல் கோப்பையை கைப்பற்றியது.

டி20 போட்டிகளில் சிறந்த துவக்க வீரர் : விராட் கோலி தேர்வு

ஆர்.சி.பி அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியானது பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தங்களது சொந்த மைதானத்தில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மார்ச் 28-ஆம் தேதி விளையாட இருக்கிறது.

– விளம்பரம் –

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஐபிஎல் தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஆர்.சி.பி அணியில் இடம் பிடித்துள்ள நட்சத்திர வீரரான விராட் கோலியும் தற்போது இந்தியா வந்தடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக விராட் கோலி பிரத்தியேகமான பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த பேட்டியின் போது பல்வேறு சுவாரசியமான கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. அந்த வகையில் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த துவக்க வீரர் யார்? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதில் பல்வேறு வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்ட வேளையில் கிரிஸ் கெயில் தான் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த துவக்க வீரர் என விராட் கோலி தனது பதிலை அளித்திருந்தார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : ராகுல் டிராவிடம் சொல்லிட்டு வைபவ் சூர்யவன்ஷி தைரியமா ஆடுனான் – பாராட்டிய சஞ்சு சாம்சன்

டி20 போட்டிகளை பொருத்தவரை கடந்து 2006 முதல் 2021 ஆம் ஆண்டு வரை சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 79 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 2 சதம் மற்றும் 14 அரைசதம் என 1899 ரன்களை குவித்துள்ளார். அதுதவிர்த்து 2009-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கிரிஸ் கெயில் 142 போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 31 அரைசதம் என 4965 ரன்களை குறித்துள்ளார்.

விளம்பரம்









Thank You

Related Posts

அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

– விளம்பரம் – லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக…

Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

விவசாயத்தைத் தாண்டி உலகளாவிய வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீடுகளால் மில்லியனர்களை உருவாக்கி வரும் தமிழகத்தின் டாப் 2026 ‘பணக்கார கிராமங்கள்’ பற்றிய சிறப்புப் பார்வை. தமிழகத்தின் கிராமங்கள் இன்று விவசாயத்தை மட்டும் சார்ந்து இருக்காமல், உலகளாவிய வர்த்தகம், தொழில்முனைவு மற்றும் வெளிநாட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 9 views
பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 5 views
லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

  • By admin
  • April 27, 2026
  • 10 views
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

  • By admin
  • April 27, 2026
  • 9 views
உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்
.site-info { display: none; }