கே.கே.ஆர் அணியை பாக்கும் போது ரொம்ப பாவமா இருக்கு.. அதுக்கு காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா விளக்கம்


இந்தியாவில் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 சீசனானது இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு காத்திருக்கிறது என்பது உறுதி. இதற்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்கத்தா அணி பலவீனமாக இருக்கிறது : சுரேஷ் ரெய்னா

இவ்வேளையில் இந்த 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் கே.கே.ஆர் அணியை பார்த்தால் பரிதாபமாக உள்ளதாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக இருக்கும் வேளையில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை பார்த்து தான் எனக்கு கவலையாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை காயம் காரணமாக தவறவிட்ட ஹர்ஷித் ராணா இந்த ஐபிஎல் தொடரையும் தவற விட்டுள்ளார்.

அதேபோன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இதனால் அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரை தாண்டி அந்த அணியில் வைபவ் அரோரா இருக்கிறார். அதேபோன்று கார்த்திக் தியாகியும் இருக்கிறார். ஆனால் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அந்த அணிக்கு இருக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : கேப்டன், கோச், ஹார்டிக் பாய் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான்.. அதான் என்னை காப்பாத்துச்சு – அபிஷேக் சர்மா பேச்சு

சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்களை பார்த்தால் தான் பிரச்சனையே இருக்கிறது. மற்ற அணிகளில் எல்லாம் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது கொல்கத்தா அணியை பார்க்க சற்று கவலையாகவே உள்ளது என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

பதவி கே.கே.ஆர் அணியை பாக்கும் போது ரொம்ப பாவமா இருக்கு.. அதுக்கு காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா விளக்கம் முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.



Thank You

Related Posts

அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

– விளம்பரம் – லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக…

Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

விவசாயத்தைத் தாண்டி உலகளாவிய வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீடுகளால் மில்லியனர்களை உருவாக்கி வரும் தமிழகத்தின் டாப் 2026 ‘பணக்கார கிராமங்கள்’ பற்றிய சிறப்புப் பார்வை. தமிழகத்தின் கிராமங்கள் இன்று விவசாயத்தை மட்டும் சார்ந்து இருக்காமல், உலகளாவிய வர்த்தகம், தொழில்முனைவு மற்றும் வெளிநாட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 9 views
பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 5 views
லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

  • By admin
  • April 27, 2026
  • 10 views
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

  • By admin
  • April 27, 2026
  • 9 views
உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்
.site-info { display: none; }