Vijay Devarakonda- Rashmika Mandanna Wedding: நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி வலம் வந்துக்கோணடிந்தது அனைவரும் அறிந்ததே. திருமண இடம், முகூர்த்தம், விருந்தினர்கள், திருமண அழைப்பிதழ் போன்ற செய்திகள் பரவி வந்த போதிலும், விஜய் மற்றும் ராஷ்மிகா தங்கள் தரப்பில் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர். அதுமட்டுமின்றி, இந்த செய்திகள் எந்த செய்தி நிறுவணத்தாலும் உறுதி படுத்த முடியவில்லை. இதனிடையே இந்த செய்திகளுக்கு நடிகள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா முற்றுப்புள்ளி வைததுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாக வரும் செய்திகள் ஒன்றும் புதியதல்ல. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையேயான நட்பு தொடங்கி காதலாக மாறியதாக அப்போதே கிசுகிசுக்கப் பட்டது. அதன் பிறகு, இந்த ஜோடி ரகசியமாக டேட்டிங், பார்ட்டிகள் மற்றும் சுற்றுலாகளுக்குச் சென்று வந்தனர். இவர்கள் தனித்தனியாக புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டாலும், புகைப்படங்களின் இடங்கள் மற்றும் பின்னணிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.
அன்றிலிருந்து இன்று வரை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மீதான ஊடகங்களின் கண்காணிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. பலமுறை, விமான நிலையங்கள் மற்றும் உணவகங்களில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவின. இருப்பினும், தங்களுக்குள் இருக்கும் உருவு குறித்து விஜய்யோ அல்லது ராஷ்மிகாவோ இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. பல நேர்காணல்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில், தொகுப்பாளர்கள் இந்த ரகசியத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் மிகவும் சாமர்த்தியமாக செயலப்பட்டு வந்தனர். அந்த கேள்விக்கு ஒரு சிறிய புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து அந்த விஷயத்தை லாவகாரமாக தவிர்த்து விட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த ஜோடி ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்தி வெளியானபோது திரையுலகத்தினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போதும் கூட, விஜய்யும் ராஷ்மிகாவும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் விஜய்யும் ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும், அதைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமான வரவேற்பு நடைபெறும் என்றும் ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. தேதி நெருங்க நெருங்க, ஊடகங்கள் பரபரப்பாக பேசத் தொடங்கின. விஜய்யின் வீட்டில் மின் விளக்குகள், அழகான அலங்காரங்கள் செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்தன.
இதற்கிடையில், இவர்களின் திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் கசிந்தது… இதனால், இனிமேலும் விஜய் மற்றும் ராஷ்மிகாவால் இந்த ரகசியத்தை மறைக்க முடியாது என்று சினிமா விமர்சகர்கள் கருதினர். அதற்கு ஏற்றார்போலவே, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தாங்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தனர்.
இந்நிலையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தனது திருமணம் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“நாங்கள் எந்த திட்டத்தையும் போடுவதற்கு முன்பே; எதையும் தேர்வு செய்வதற்கு முன்பே நீங்கள் ஏற்கனவே எங்களுடன் இருந்தீர்கள்.
அளவற்ற அன்புடன் எங்களுக்கு நீங்கள் ஒரு பெயரையும் கொடுத்தீர்கள். எங்களை VIROSH என்றும் அழைத்தீர்கள். அதனால் இன்று நிறைந்த மனதுடன் உங்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக; நாங்கள் இணைவதை ஒரு பெயரில் அழைக்க விரும்புகிறோம். அது ‘VIROSH திருமணம்’.
எங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு அன்புடன் தாங்கி நிற்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் எங்களின் ஒரு பகுதியாகவே இருப்பீர்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் தற்போது இவர்களின் திருமண செய்திகள் உறுதியாகி உள்ளது.
மேலும் படிக்க: மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது “99/66” தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு
மேலும் படிக்க: ரீ-ரிலீஸ் வரலாற்றில் புதிய சாதனை: வசூல் வேட்டையில் ‘கில்லி’.. ‘துணிவு’ நிலை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android இணைப்பு: https://bit.ly/3AIMb22
ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ