தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அணுக கி.வீரமணி கோரிக்கை – Kumudam

வட சென்னை பகுதிகளில் தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல், பழைய பணி நிலைமையே தொடர வேண்டுமென சென்னை ரிப்பன் மாளிகைக்கு எதிரே 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 10-வது நாட்களாக போராடி வருகின்றனர். இன்று காலை நடைப்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

போராட்டக்குழுவினர் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”கடந்த 10 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, ஊதியக் குறைப்புக் கூடாது, தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாகும்.

2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் தான். வெள்ளத்தின் போதும், கரோனாவின் போதும் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களின் உழைப்பைப் போற்றி விருந்து வைத்து நன்றி தெரிவித்தவர் நம்முடைய முதலமைச்சர். பெரிதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உழைக்கும் மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களுக்குச் சமூகநீதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 

‘‘அனைவருக்கும் அனைத்தும் என்பதே நமது இலக்கு’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து உறுதிபடத் தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி அரசை நடத்தி வருகிறார். அவருடைய உழைப்பையும், நோக்கத்தையும், செயல்பாட்டையும் இத்தகைய பிரச்சினைகளைக் காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.

நகரைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உரிமையும், பணிப் பாதுகாப்பும், அவர்களின் நலனும் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளாகும். ‘நகர சுத்தித் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகவே ஆக்க வேண்டும்’ என்பதே தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடாகும். நாளையும் வெள்ளம், மழை, புயல் என்று வருமேயானால், அப்போதும் முன் களத்தில் நிற்கப்போகும் பணியாளர்கள் அவர்களே.

எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனது சமூகநீதிப் பார்வைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மனிதநேயத்தோடு அவர்களை அணுக வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Thank You

Related Posts

முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி – Kumudam

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள பொதுமக்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைப்பெற்றுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியில் கல்லீரல் திருட்டு தொடர்பான புகார்களும் வெளிவந்துள்ளன. இதனைத் தொடர்ந்து,…

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 28, 2026 7:20 PM IST ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“இந்தச் சீசனில் எங்களது முதல் தோல்வி, எனவே இது நிறைய பாடங்களைக் கற்றுத் தரும்”- ஸ்ரேயாஸ் ஐயர் | “This is our first defeat of the season, so it will teach us a lot of lessons,” said Shreyas Iyer.

  • By admin
  • April 29, 2026
  • 7 views
“இந்தச் சீசனில் எங்களது முதல் தோல்வி, எனவே இது நிறைய பாடங்களைக் கற்றுத் தரும்”- ஸ்ரேயாஸ் ஐயர் | “This is our first defeat of the season, so it will teach us a lot of lessons,” said Shreyas Iyer.

ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி அபாரம்; 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடிய ராஜஸ்தான்

  • By admin
  • April 29, 2026
  • 6 views
ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி அபாரம்; 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடிய ராஜஸ்தான்

கண்ணூர் வாரியர்ஸ் ஃபோர்கா கொச்சிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆட்டமிழக்காமல் தொடரை நீட்டித்தது

  • By admin
  • April 29, 2026
  • 5 views
கண்ணூர் வாரியர்ஸ் ஃபோர்கா கொச்சிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆட்டமிழக்காமல் தொடரை நீட்டித்தது

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அணுக கி.வீரமணி கோரிக்கை – Kumudam

  • By admin
  • April 29, 2026
  • 4 views
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அணுக கி.வீரமணி கோரிக்கை – Kumudam

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

  • By admin
  • April 29, 2026
  • 4 views
முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள், அதீதமான வறட்சி தான் காரணமா? | Mudumalai: 3 elephants die in one week, is extreme drought the cause? |

ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது

  • By admin
  • April 29, 2026
  • 5 views
ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமல்ல இந்த 5 பேருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது
.site-info { display: none; }