பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) ஐபிஎல் 2026 ஹைலைட்ஸ்: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு சண்டிகர் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 40-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி 11 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கொனோலி 14 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 44 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடி 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கடைசி ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கும், அடுத்த இரண்டு பந்தை சிக்சருக்கும் விரட்டி 20 பந்தில் அரைசதம் விளாசினார். கடைசி 2 பந்துகளில் பவுண்டரிகள் விளாசினார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் பர்கெர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
223 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 27 பந்துகளில் 51 ரன்களும், 16 பந்துகளில் 43 ரன்களையும் விளாசினர்.
ரியான் பராக் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 29 ரன்களையும், ஃபெரரியா 25 பந்துகளில் 52 ரன்களையும் ஷூபம் தூபே 12 பந்துகளில் 31 ரன்களை விளசினார்.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பஞ்சாப் தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் வீழ்த்தினர்.
பிளேயிங் லெவன் வீரர்கள்
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கூப்பர் கோனாலி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், லாக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: வைபவ் சூரியவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டோனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, யாஷ் ராஜ் புஞ்சா