– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் குவித்தது.
டிம் டேவிட் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
பின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆர்.சி.பி சார்பாக விளையாடிய அதிரடி வீரரான டிம் டேவிட் 25 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 70 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக அவர் 8 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஆர்.சி.பி அணிக்காக யுவராஜ் சிங் மற்றும் ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஆர்.சி.பி அணிக்கு எதிராக ஐந்தாவது அல்லது அதற்கு கீழ் இறங்கி விளையாடிய வீரர்களில் ஒரே இன்னிங்சில் 8 சிக்ஸர்களை அடித்த வீரர்களாக யுவராஜ் சிங் மற்றும் ஏபிடி ஆகியோர் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் 8 சிக்ஸர் அடித்ததன் மூலம் மூன்றாவது வீரராக டிம் டேவிட் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : முதல் வேகப்பந்து வீச்சாளராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்
கடந்த 2014-ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிராக யுவராஜ் சிங் 9 சிக்ஸர்களை அடித்து இருந்தார். அதேபோன்று அதே 2014 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஏபிடி 8 சிக்ஸர் விளாசியிருந்தார். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி எதிராக டிம் டேவிட் 8 சிக்ஸர்களை அடித்து அந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்