ஜிதேஷ் சர்மாவை தாண்டி இஷான் கிஷனை டி20 உலககோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்?





ஜிதேஷ் மற்றும் இஷான்


– விளம்பரம் –

அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரினை வென்றதன் மூலம் மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி அடுத்தடுத்த டி20 உலக கோப்பையை கைப்பற்றிய முதல் அணியாகவும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்தது. அதோடு இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையும் பிசிசிஐ-யிடம் இருந்து கிடைத்தது.

ஜிதேஷ் சர்மாவை தாண்டி இஷான் கிஷனை தேர்வு செய்தது ஏன்? கேப்டன் விளக்கம்

இந்நிலையில் இந்த தொடர் முடிவடைந்ததற்கு பின்னதாக இந்த தொடரில் இந்திய அணி செயல்பாடு, இந்திய அணியின் தேர்வு மற்றும் இந்திய அணியின் முயற்சி என பல்வேறு விடயங்கள் குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் சில தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்காமல் அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பரான இஷான் கிஷனை தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்த சில தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

– விளம்பரம் –

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜிதேஷ் சர்மா கடந்த ஓராண்டாகவே இந்திய டி20 அணியில் தொடர்ந்து இடம்பிடித்து விளையாடி வந்தார். இந்த நேரத்தில் அவரை வெளியேற்றி இஷான் கிஷனை கொண்டு வந்தது எனக்குமே மிக கடினமான ஒரு முடிவாக தான் இருந்தது. ஆனால் அணியின் தேவைக்கு என்னவோ அதை செய்ய விரும்பியே நாங்கள் ஜிதேஷ் சர்மாவை நீக்கினோம்.

அதேவேளையில் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை கொண்டு வந்தோம். அதனால் நிச்சயம் ஜிதேஷ் சர்மா ஏமாற்றம் அடைந்து இருப்பார். இருந்தாலும் நாங்கள் அணியை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த கடினமான முடிவை எடுத்தோம். உண்மையிலேயே இஷான் கிஷனை தேர்வு செய்தது ஒரு தைரியமான முடிவு தான்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : பழைய அணியாக இருந்தாலும் விடமாட்டேன்.. ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடுவது குறித்து – சஞ்சு சாம்சன் கருத்து

உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடிய ஆட்டத்தை வைத்தும், டாப் ஆர்டரில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை கணித்து ஒரு உள்ளுணர்வின் அடிப்படையிலேயே அவரை அணியில் எடுத்தோம். அவரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்த டி20 உலக கோப்பை தொடரில் வெளிப்படுத்தினார் என இஷான் கிஷனின் தேர்வு குறித்து சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

  • By admin
  • April 23, 2026
  • 6 views
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
.site-info { display: none; }