லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா… ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி – சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்



சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு ஆதரவாக பேச வந்த மகளிர் அமைப்பு தலைவியை தனியாக அழைத்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் விஜயா. அதைப்பற்றி பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜும், விஜயாவும் சேர்ந்து ரோகிணியை ஆள்வைத்து அடித்துள்ள நிலையில், அவர் இது தொடர்பாக மகளிர் அமைப்பிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த அமைப்பின் தலைவி இதுகுறித்து விசாரணை நடத்த விஜயாவின் வீட்டுக்கு வந்தபோது, மனோஜ் தன் வாயாலேயே ரோகிணியை அடித்ததை ஒப்புக் கொண்டார். இதைக்கேட்டு டென்ஷன் ஆன அந்த தலைவி, உங்கள் மீது ஆக்‌ஷன் எடுப்பேன் என கூறிவிட்டு சென்றார். பின்னர் அவரையே சந்தித்து லஞ்சம் கொடுக்க முயன்றார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

விஜயா லஞ்சம் கொடுக்க முயன்றபோது அதை அந்த மகளிர் அமைப்பு தலைவி வீடியோவாக எடுத்துவிடுகிறார். உடனே அவரிடம் என்னை இப்படியெல்லாம் விலைக்கு வாங்க முடியாது. எனக்கு நீங்க லஞ்சம் கொடுக்க வந்ததை வீடியோ எடுத்துட்டேன். இந்த ஒரு ஆதாரம் போதும், கோர்ட்டில் உங்களை என்ன பண்றேன்னு பாருங்க என எச்சரித்துவிட்டு கிளம்புகிறார். இதனால் பதறிப்போன விஜயா, ஸ்ருதி மற்றும் ரவியிடம் என்ன பண்ணுவது என கேட்கிறார். அவர்கள் இருவரும் நீங்கள் லஞ்சம் கொடுக்க வந்தீங்கன்னு தெரிஞ்சிருந்தா நாங்களே தடுத்திருப்போம் என கூறுகிறார்கள்.

பின்னர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறுகிறார் ரவி, இதைக்கேட்ட அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். இதையடுத்து முத்து மற்றும் மீனாவிடம், நீங்க ரெண்டு பேரும் போய் அந்த அம்மாவிடம் பேசி அவர்களிடம் உண்மையை எடுத்துக் கூறுங்கள் என சொல்கிறார். நாம போய் சொல்வதை விட இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட உங்க அண்ணனே நேரில் சென்று நடந்தவற்றை கூறினால், அவர்கள் நம்புவார்கள் என ஐடியா கொடுக்கிறார் மீனா. இதையடுத்து இருவரும் மனோஜிடம் பேச அவருடைய ஷோரூமுக்கு செல்கிறார்கள். அங்கு சென்று அந்த அம்மாவை நேரில் சந்தித்து பேச அழைக்கிறார்கள்.

ஆனால் மனோஜ் திமிராக, நான் ஒரு பிசினஸ்மேன், நான் யாரையும் பார்க்க வரமாட்டேன் என சொல்லிவிடுகிறார். பின்னர் முத்துவும், மீனாவும் மட்டும் அந்த மகளிர் அமைப்பு தலைவியின் ஆபிஸுக்கு செல்கிறார்கள். அங்கு சென்றபோது ஒருவர் தன் மகனுக்காக பேச வந்திருந்த நிலையில், அவரை திட்டிய அந்த தலைவி, சம்பந்தப்பட்ட உங்க மகன் வந்து பேசமாட்டாரா என காட்டமாக திட்டுகிறார். இதையெல்லாம் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த முத்து மற்றும் மீனா, நம்ம போனாலும் இப்படி தான் திட்டு வாங்குவோம், சரி வா நம்ம போயிடலாம் என சொல்லி வீட்டுக்கு கிளம்புகிறார்கள்.

வீட்டுக்கு வந்தபோது ரவி மற்றும் முத்து இருவரும் மனோஜிடம் எடுத்துக் கூறுகிறார்கள். அவர்கள் எவ்வளவு சொல்லியும் மனோஜ் அந்த லேடியை பார்க்க வர மறுக்கிறார். சிறிது நேரம் கழித்து மனோஜுக்கு விஜயா பார்த்த பெண் வருகிறார். அவர் அந்த லேடி பற்றியும் அவர் அடுத்து என்னவெல்லாம் செய்வார் என்பது பற்றியும் கூறுகிறார். அடுத்ததாக அவர் பெண்களை திரட்டி வீட்டின் முன் போராட்டம் நடத்துவார் என சொல்கிறார். அதுமட்டுமின்றி ரோகிணியை நீங்கள் அடிக்க முயன்றதால் உங்களையும் உங்க அம்மாவையும் கைது செய்ய கூட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.



Thank You

Related Posts

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

ரெனால்ட் டிரைபர், குறைந்த விலையில் 7 பேர் அமரக்கூடிய காரைத் தேடும் இந்திய நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. நெகிழ்வான இருக்கை அமைப்பு, 18-20 கி.மீ மைலேஜ், மற்றும் 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவற்றுடன் இது கிடைக்கிறது. கார்…

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) போட்டியின் சிறப்பம்சங்கள்: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 6 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 4 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 6 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 11 views
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }