அந்தவொரு தோல்விதான் எங்களை கோப்பையை ஜெயிக்க தூண்டியது – ஷிவம் துபே ஓபன்டாக்

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் லீக் சுற்று ஆட்டங்களில் நான்கு வெற்றிகள் பெற்ற இந்திய அணி ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

இந்தவொரு தோல்வி தான் எங்களை யோசிக்க வைத்தது : ஷிவம் துபே

அதன் பின்னர் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து. பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினர்.

இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்த வேளையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விதான் எங்களை கோப்பையை நோக்கி வெல்வதற்கு உந்தியது என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷிவம் துபே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த மோசமான தோல்விதான் எங்களது முழுமையான எழுச்சிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் அந்த தோல்விக்கு முன்பு நாங்கள் சிறப்பாக விளையாடி வந்தாலும் அந்த தோல்வி எங்களை விழிப்புடன் செயல்பட உதவியது. அதன் பின்னர் முற்றிலும் புதிய அணியாக உருவெடுத்த நாங்கள் இறுதி போட்டியில் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதனாலே எங்களால் இந்த இறுதி போட்டியில் வெற்றிபெற முடிந்தது.

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பையின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த ஐ.சி.சி – லிஸ்ட் இதோ

இந்திய அணியில் என்னுடைய பணி ஸ்ட்ரைக் ரேட்டை எப்போதுமே அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். அதேபோன்று பந்துவீச வாய்ப்பு கிடைத்தால் ரன்களை கட்டுப்படுத்தி துல்லியமாக பந்துவீச வேண்டும். இந்த இரண்டு ரோல்களை மட்டும் தான் நான் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரது ஆதரவுடன் செய்தேன் என ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.

பதவி அந்தவொரு தோல்விதான் எங்களை கோப்பையை ஜெயிக்க தூண்டியது – ஷிவம் துபே ஓபன்டாக் முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.

Thank You

Related Posts

அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்

– விளம்பரம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான பார்மை வெளிப்படுத்தி சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரராக இருந்து…

5 ஆண்டுகள் 60 போட்டிகள்.. ஒருவழியாக முதல் முறையாக திலக் வர்மா பெற்ற பரிசு

– விளம்பரம் – அகமதாபாத் நகரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 99 ரன்கள் வித்தியாசத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழ சின்னம் முடக்கக்கோரிய ராமதாசு வழக்கு: அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 8 views
மாம்பழ சின்னம் முடக்கக்கோரிய ராமதாசு வழக்கு: அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு – Kumudam

அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்

  • By admin
  • April 22, 2026
  • 6 views
அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்

KAATHADI – Official Music Video | Sanjiev, Alya | Hari Mahadevan | An Anand Kashinath Musical – Ahatamil

  • By admin
  • April 22, 2026
  • 7 views
KAATHADI – Official Music Video | Sanjiev, Alya | Hari Mahadevan | An Anand Kashinath Musical – Ahatamil

Free PMP Exam Brain dumps – Pass Fast with Latest Questions – TN News

  • By admin
  • April 22, 2026
  • 10 views
Free PMP Exam Brain dumps – Pass Fast with Latest Questions – TN News

5 ஆண்டுகள் 60 போட்டிகள்.. ஒருவழியாக முதல் முறையாக திலக் வர்மா பெற்ற பரிசு

  • By admin
  • April 22, 2026
  • 3 views
5 ஆண்டுகள் 60 போட்டிகள்.. ஒருவழியாக முதல் முறையாக திலக் வர்மா பெற்ற பரிசு

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 2 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam
.site-info { display: none; }