ஷாஹித் அப்ரிடி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது வீரராக சஞ்சு சாம்சன்





சாம்சன் மற்றும் கோஹ்லி


– விளம்பரம் –

நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கியமான காரணமாக சஞ்சு சாம்சன் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த தொடரின் ஐந்து ஆட்டங்களில் விளையாடிய அவர் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 321 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். சூப்பர் 8 சுற்று போட்டி, அரையிறுதி போட்டி, இறுதிப்போட்டி என அனைத்திலுமே அசத்திய சஞ்சு சாம்சன் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற உதவியிருந்தார்.

ஷாஹித் அப்ரிடி மற்றும் விராட் கோலியுடன் இணைந்த சஞ்சு சாம்சன் :

அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 46 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 89 ரன்கள் குவித்து இந்திய அணி 255 ரன்கள் குவிக்க மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுவரும் வேளையில் பல்வேறு சாதனைகளையும் தனிப்பட்ட வகையில் அவருக்கு பெற்று தந்துள்ளது.

– விளம்பரம் –

அந்த வகையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருந்த அவர் பாகிஸ்தான் அணியின் வீரரான ஷாஹித் அப்ரிடி மற்றும் இந்திய வீரரான விராட் கோலி ஆகியோரது சாதனையையும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சமன் செய்துள்ளார். அந்த வகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்த அவர் இறுதி போட்டியின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் அரைசதம் அடித்தார். இப்படி ஒரு டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அரைசதம் அடித்த மூன்றாவது சர்வதேச வீரராக சஞ்சு சாம்சன் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாதனையை சமன் செய்து அசத்திய இந்திய அணி – விவரம் இதோ

இதற்கு முன்னதாக கடந்து 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது அரை யிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் பாகிஸ்தான் வீரரான ஷாகித் அப்ரிடி அரைசதம் அடித்திருந்தார். அதன்பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இவ்வேளையில் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அரைசதம் அடித்து அவர்களது பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 8 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 7 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 13 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்
.site-info { display: none; }