வேட்பாளர்கள் மீது பாலியல், மோசடி வழக்குகள்  : தவிக்கும் தமிழக வெற்றிக் கழகம்  – Kumudam


பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் மீது பெண் நிர்வாகி கொடுத்த பாலியல் புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த பரபரப்பு ஒயாத நிலையில், தற்போது தவெக வாணியம்பாடி வேட்பாளர் மீது மோசடி புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக சார்பில் கடந்த 30-ம் தேதி  அக்கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து தவெக வேட்பாளர்கள்  மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சையத் புர்ஹாதீன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தற்போது அம்பலமாகி வருகிறது.

குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போலி நிறுவனங்கள் நடத்தி சுமார் ரூ.600 கோடி மோசடி செய்தாக அவர் மீது சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதை வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில்.அவரை நேரில் ஆஜராக 5 முறை சம்மன் அனுப்பியும் தனது உடல் நலம் காரணம் காட்டி ஆஜராகவில்லை என தெரிகிறது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் வாணியம்பாடியில் உள்ள இவரது வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் வேட்பாளர் சையத் புர்ஹாதீன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  நிலுவையில் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு தவெக சார்பில் சீட் வழங்கப்பட்டிருப்பது தவெக தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“உண்மைக்கு புறம்பானது!”

தவெக-வின் வெற்றி உறுதி என்னும் அச்சத்தால் 140 போலி நிறுவனங்கள், உருவாக்கி அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தீய சக்திகள் என்மீது அவதூறு பரப்பி வருகின்றனர்; இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது; பொய்யான தகவலை பரப்பி வருபவர்களை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன் வாணியம்பாடி தவெக வேட்பாளர் வழக்கறிஞர் சையத் புர்ஹானுதீன் பேட்டி



Thank You

Related Posts

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

உள்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26 ம் தேதி உத்தரவிட்டது.…

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் குழப்பம்: தவெக பெயரில் வாக்கு சேகரிக்கும் வேல்முருகன் கட்சியினர் – Kumudam

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. வேட்புமனுதாக்கல் செய்த கையோடு, பெரம்பூரில் விஜய் பரப்புரையும் மேற்கொண்டார். வேல்முருகனின்  தமிழக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 3 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam
.site-info { display: none; }