பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு! – Kumudam

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பகுதிநேர ஆசிரிய சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ. 12,500-லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

இதுவரை பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கோடை விடுமுறை காலமான மே மாதத்தில் ஊதியம் வழங்கப்படாத நடைமுறை இருந்து வந்தது. ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இனி வரும் காலங்களில் மே மாதத்திலும் ரூ. 10,000 ஊதியம் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். “பொங்கல் திருநாளில் ஆசிரியர்களின் மகிழ்ச்சி வெறும் வார்த்தையில் மட்டும் இல்லாமல், உண்மையாகவே இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் விருப்பத்திற்கிணங்க இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய எஸ்.எஸ்.ஏ (SSA) திட்டத்திற்கான ரூ. 3,548 கோடி நிதி இன்னும் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இந்தச் செலவினங்களைத் தமிழக அரசே ஏற்றுச் செயல்படுத்துவதாகத் தெரிவித்தார். மேலும், பணியின் போது உயிரிழந்த 200 இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்துத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக ஆசிரிய சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்துகளையும் அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Thank You

Related Posts

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 7:49 PM IST சாய்குமாரை தமிழக தலைமை செயலாளராக நியமித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த பொது நல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக…

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 2:58 PM IST சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. கோப்பு படம் வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 12 views
தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

  • By admin
  • April 22, 2026
  • 2 views
Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 9 views
“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 16 views
AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam
.site-info { display: none; }