– விளம்பரம் –
நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 50-வது போட்டியானது நேற்று பல்லகல்லே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது :
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பர்ஹான் :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் ஃபர்கான் 100 ரன்களையும், பகார் ஜமான் 84 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது :
– விளம்பரம் –
20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக பவன் ரத்னநாயகே 58 ரன்களையும், தசுன் ஷானகா 76 ரன்களையும் குவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தானின் துவக்க வீரராக விளையாடிய சாஹிப்சாதா பர்ஹான் 60 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த 100 ரன்களின் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றை தகர்த்துள்ளார். அந்தவகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
– விளம்பரம் –
இதையும் படிங்க : அணியின் நலனுக்காக நான் இதையும் செய்ய தயார்.. தனது பேட்டிங் ஆர்டர் மாற்றம் குறித்து – திலக் வர்மா பேச்சு
ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக விராட் கோலி 319 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்த வேளையில் இந்த நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் சாகிப்சதா பர்ஹான் 7 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 383 ரன்கள் குவித்து ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்